கேட்க கூடாததை கேட்ட கணவன்! இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!

தாம்பரம் அருகே கணவன் -மனைவி க்கு இடையேயான குடும்ப தகராறு காரணமாக இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


தாம்பரம் அடுத்த புலிகொரடூர் முத்துமாரியம்மன் கோவில் பகுதியை  சேர்ந்த  சந்தோஷ் லாரி ஓட்டிவருகிறார், இவருக்கும்  மனைவி செவ்வந்திக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி  இரண்டு குழந்தைகள் உள்ளனர்

இந்த நிலையில் நேற்று இரவு  கணவர்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட மனகசப்பு தகராறாக மாறியதில் மனம் உடைந்த  செவ்வந்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் சண்டையின் போது கணவன் கேட்க கூடாத கேள்வியை கேட்டதாகவும் இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்கிறார்கள்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்  இது தற்கொலையா??? அல்லது திட்டமிட்டு செய்த கொலையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கணவர் சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும்  செவ்வந்தி சாவில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டும் பெண் வீட்டார் முறையான விசாரணை மூலமாக நீதிகிடைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.