எவ்வளவு கேட்டும் கொடுக்க மறுத்த தாய்! ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்!

தனது தாய் மற்றும் சகோதரனை கத்தியால் குத்திக் கொன்ற 56 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சுனில் அரோரா. உத்தம் நகரில் வசித்து வரும் இவர் மீது, நரேஷ் சிங் என்பவர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதாவது, வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தபோது, ராஜேந்தர் என்ற நபர் உடம்பு முழுக்க ரத்தக் காயங்களுடன் வந்து, தன்னையும், தனது அம்மாவையும், தனது அண்ணன் சுனில் கத்தியால் குத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதன்பேரில், நரேஷ் சிங் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு, ராஜேந்தரின் வீட்டுக்குச் சென்றபோது, அங்கே சுனில் கத்தியுடன் நின்றிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குடும்ப விவகாரம் என்றும், யாரும் தலையிடக்கூடாது என்றும் மிரட்டிய சுனில், தங்கள் கண் முன்னாலேயே மீண்டும் ராஜேந்தரை குத்திக் கொன்றார் என்றும் நரேஷ் சிங் தனது புகார் கூறியுள்ளார். 

இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து, சுனில் அரோராவை கைது செய்தனர். இதுபற்றி விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.