மனைவியை 3வது மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவன்! பதற வைக்கும் காரணம்! பிறகு நேர்ந்த அதிசயம்!

சென்னை கொடுங்கையூரில் ஒரு பெண் 3-வது மாடியில் இருந்து விழுந்த நிலையில், கணவன், கணவனின் தாய் மற்றும் தம்பியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கொடுங்கையூர் ஆர்.அர்.நகரைச் சேர்ந்தவர் சாந்தி இவரது மகன் சசிகுமாருக்கு 5 ஆண்டுகளுக்கு முன் சித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் 3 வயதுக் குழந்தை உள்ளது. இந்நிலையில் சசிகுமார், அவரது தாய் சாந்தி, தம்பி ஆகியோர் சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை 3-வது மாடியில் உள்ள அவர்கள் வீட்டில் இருந்து சத்தம் கேட்டதையடுத்து வழக்கமான சண்டை என அலட்சியமாக இருந்ததாக தெரிவித்த அக்கம்பக்கத்தினர் 3-வது மாடியிலிருந்து யாரோ விழுந்த சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தபோது சித்ரா சாலையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தனர். 

அப்போது மாடியில் இருந்து சாலைக்கு பதற்றத்துடன் ஓடி வந்த சசிகுமார், சாந்தி உள்ளிட்டோர் தாங்கள் வழக்கம் போல சித்ராவுடன் உறவில் இருப்பவர் யார் எனக் கேட்டதாகவும் அதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் சித்ரா 3-வது மாடியில் இருந்து குதித்து விட்டதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

ஆனால் அதனை நம்பாத அக்கம் பக்கத்தினர் சித்ராவை  மருத்துவமனையில் அனுமதித்ததோடு காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சித்ராவுக்கு நினைவு திரும்பிய நிலையில் தனது  கணவனும், மாமியாரும், கணவனின் தம்பியும் தன்னை கொல்ல முயற்சித்ததாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

எனினும் போலீசார் 3 பேரையும் கைது செய்யவில்லை சித்ரா கீழே விழக் காரணம் தற்கொலை முயற்சியா, கொலை முயற்சியா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.