தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை கரகரவென அறுத்த கணவன்! அதிர வைக்கும் காரணம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே குடும்பத்தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு போலீசில் சரணடைந்துள்ளார்.


இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ரவி மற்றும் காமாட்சி என்பவருக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு ரவி குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார் இதையடுத்து ரவிக்கும் காமாட்சிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு அது பெரிய சண்டையாக மாறியது. சிறிது நேரம் சண்டையிட்ட பிறகு இருவரும் உறங்கச் சென்று உள்ளனர். பின்னர் ஆத்திரம் அடைந்த ரவி குடிபோதையில் தான் என்ன செய்வதென்றே தெரியாமல் போதை தலைக்கேறி நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த காமாட்சியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இச்சம்பவத்தை அறிந்த அருகில் இருந்தவர்கள் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்ந்து ரவி தானே கொலையை ஒப்புக் கொள்வதாக கூறி சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். ரவியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர் .பின்னர் சம்பவ இடத்திற்கு  வந்த போலீசார் காமாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.