குடும்ப நடத்த முடியாத விரக்தி! மனைவி, குழந்தைகளுக்கு சரமாரி கத்தி குத்து! என்ஜினியர் அரங்கேற்றிய கொடூரம்!

குர்கான்: மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு, கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரகாஷ் சிங் (55 வயது), பிஹெச்டி படித்துள்ளார். இவர்,  கெமிக்கல் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு, மனைவி மற்றும் 22 வயதில் ஒரு மகள், 13 வயதில் ஒரு மகன் இருந்துள்ளனர்.

இந்நிலையில், குர்கானில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்த பிரகாஷ் சிங், குடும்பச் சுமை தாங்காமல் கஷ்டப்பட்டுள்ளார். திடீரென திங்கள்கிழமை அவர்கள் வீட்டில் யாரும் நடமாட்டம் இல்லாமல் இருக்கவே, சந்தேகம் அடைந்த அண்டை வீட்டார், போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த அனைவரையும் பிரகாஷ் சிங் அடித்துக் கொன்றுவிட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக, தெரியவந்தது.  அவர்கள் வளர்த்த நான்கு நாய்களும்அவர்களுக்கு அருகே பரிதாபத்துடன் அமர்ந்திருந்தன.

பிரகாஷ் சிங், தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துச் சென்றுள்ளார். அதனை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், மனைவி, மகள், மகன் என அனைவரையும் அடித்துக் கொன்றுவிட்டு, பிரகாஷ் சிங், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் எனவும், இதற்கு குடும்பச் சுமை முக்கிய காரணம் எனவும் தெரியவந்துள்ளது.