5 பேர் பிணத்தருகே அழுதுகொண்டிருந்த 1 வயது குழந்தை..! மந்திரவாதி பேச்சைக் கேட்டு தற்கொலையா..? ஃபிஜி தீவு திகில்!

ஃபிஜி தீவில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஃபிஜி தீவு அருகே உள்ள நவுசரி ஹைலேண்ட்ஸ் மலை உச்சி அருகே சென்று கொண்டிருந்த கௌரா தோலோய் என்ற பெண் அங்கு ஒரு குழந்தை அழுது கொண்டிருப்பதை கவனித்தார்.


தானும் ஒரு தாய் என்பதால் பதறிப் போன கௌரா அந்தக் குழந்தையை தூக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு குழந்தைக்கு அருகில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ந்து போனார். பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பசியை தற்காலிகமாக அடக்க தரப்படும் நேப்பியை மட்டும் வைத்திருந்த குழந்தைக்கு பால் கொடுத்து தன்னுடைய தாய்மைக் குணத்தை வெளிப்படுத்தினார் கௌரா. அந்த ஒரு வயது குழந்தை இறந்து போன 5 பேரில் ஒருவரின் குழந்தை என்பதை போலீசார் உறுதிப் படுத்தினர். இறந்து போனவர்கள் நாடி நகர் அருகே உள்ள லெகாலெகா என்ற இடத்தில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

5 பேர் மரணம் குறித்த தகவல் அறிந்த உறவினர் ராஜேஷ் என்பவர் பிஜி தீவு சென்றார். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு ஆய்வில் 5 பேரும் விஷத்தை குடித்து இறந்து போனது தெரியவந்துள்ளது. ஒரு வயது குழந்தைக்கு மட்டும் மனித நேய அடிப்படையில் விஷம் தரவில்லை என கூறப்படுகிறது. ஆனாலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு ஏதும் பிரச்சனை இல்லாததால் மந்திரவாதி பேச்சை கேட்டு இப்படி ஒரு முடிவு எடுத்தார்களா அல்லது மந்திரவாதி கொடுத்த பிரசாதத்தை சாப்பிட்டு உயிர் இழந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளது.

இதை அடுத்து நியூசிலாந்தை சேர்ந்த மந்திரவாதி மற்றும் அவரது மனைவியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது ஃபிஜி தீவு போலீஸ். வாழ்க்கையில் எந்த பிரச்சனை இல்லாவிட்டாலும் இதுபோன்ற மந்திரவாதிகள் சொல்லும் குருட்டுத்தனமான சொல்லால் பலர் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர். சிலர் நரபலிக்கு சம்மதிக்கின்றனர்.

சமீபத்தில் டெல்லியில் கூட குடும்பத்தில் உள்ளவர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்தால் சொர்க்கத்திற்கு செல்லலாம் என மந்திரவாதி சொன்னதை கேட்டு 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரையும் ஏமாற்றும் வித்தையை போலி மந்திரவாதிகள் தெரிந்து வைத்துள்ளனர். ஒருவேளை மந்திரவாதிகள் உண்மையானவர்களாக இருந்து அவர்களது மந்திரங்கள் போலியானவையா என தெரியவில்லை.