புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்ட பொய் செய்தி..! உஷார் மக்களே..! ஆவின் வெளியிட்ட அறிக்கை!

இன்று 2.6 .2020 மாலையில், தங்களின் புதிய தலைமுறை டிவியில், அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் 250 பணியாளர்களுக்கு , கொரோனா என ஒரு தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


மேற்கண்ட செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும். அரசு சார்ந்த நிறுவனமான, ஆவின், அரசு வழங்கியுள்ள அனைத்து வழிகாட்டு அறிவுரைகளை மேற்கொண்டு, அனைத்து பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை பண்ணைக்குள் அனுப்பும் முன்னர் தெர்மல் ஸ்கிரீனிங் எனப்படும் வெப்பமானி கொண்டு, உடலின் வெப்ப நிலையை அறிந்த பின்னர், தகுதியான நபர்களை மட்டுமே பணிசெய்ய அனுப்பப்படுகின்றனர்.

மேலும் அனைத்து ஊழியர்களுக்கும், ஒப்பந்த பணியாளர்களுக்கும், மாஸ்க், கையுறை, சனிடைசர் போன்ற சுகாதார நடவடிக்கைகள் அரசின் வழிகாட்டுதல் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு பணியில் உள்ள அனைவருக்கும் இலவசமாக தினசரி கபசுரகுடிநீர் 50 மில்லி தினசரி வழங்கப்படுகிறது.

மாதவரம் பால் பண்ணையில் ஒரு நபர் கோரோனா தொற்றுநோயால் இறந்துள்ளார் என்பது உண்மை. அவர் கடந்த ஆண்டு நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டு ஒரு மாதம் விடுப்பில் இருந்தவர். அந்த நபருக்கு தான் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது, அதுவும் பால்பண்ணையில் ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை.

இவ்வாறான நிலையில், 250 நபர்களுக்கு அம்பத்தூர் பால் பண்ணையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்கின்ற ஒரு தவறான செய்தியை புதிய தலைமுறை நிர்வாகம் வெளியிட்டதற்கு உடனடியாக மறுப்பு செய்தி வெளியிடும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற தவறான செய்திகளை வெளியிட்டு, பொதுமக்களுக்கு, இரவும் பகலும் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை நண்பர்கள், ஆகியோர் போல, ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் பொதுமக்களுக்கு பால் கிடைத்திட உழைத்து வரும் ஆவின் ஊழியர்களையும் அலுவலர்களையும் மனது புண்படும் நடந்துகொள்ள வேண்டாம் என செய்தி நிறுவனங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

எந்தவிதமான செய்தியும் அதனுடைய உண்மைத்தன்மையை ஆவின் நிர்வாகத்திடம் தெரிந்துகொண்டு வெளியிடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் மேலும் இந்த கொரோனா போன்ற மிகவும் சிரமமான கால காலங்களில் அனைத்து பணியாளர்களும் தங்களை தங்களின் உயிரை பணயம் வைத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறார்கள் . இந்த பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களின் மற்றும் பணியாளர்களின் மனம் மிகவும் வருத்தம் அடைந்துள்ளது.

அனைத்து பொது மக்களுக்கும் பால் கிடைத்திட உழைத்து வரும் அவர்களை மரியாதை படுத்த வில்லை என்றாலும் ,அவர்கள் மனதை நோகடிக்க வேண்டாம், என்று என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் . மேலும் இது போன்ற ஒரு சென்சிட்டிவான செய்திகளை வெளியிடும் முன்னர், நிர்வாகத்திடம் உறுதி செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

ஆவின் நிர்வாகம்.