பாடப்புத்தகத்தில் அய்யா வைகுண்டர் குறித்து அபத்தம்! கொதிக்கும் நாடார்கள்! காரணம் இது தான்..!

அய்யா வைகுண்டர் உருவ வழிபாடு இல்லாதவர். ஏதோ ஒரு படத்தை வைத்து தமிழக பாடபுத்தகத்தில் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக மாற்ற வேண்டும்" என அய்யா அறநெறி பரிபாலன இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டம் சாமிதோப்பில் நடந்தது. கூட்டத்திற்கு பின் அய்யா அறநெறி பரிபாலன அறக்கட்டளை தலைவர் பாலஜனாதிபதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "அய்யா வைகுண்ட சுவாமி பற்றி எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1, பிளஸ்- 2 பாடத் திட்டங்களில் தவறாக சித்தரிக்கபட்டுள்ளது.

அது அய்யாவழி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாகவும்,அய்யா வைகுண்ட சுவாமி மனிதனாக பிறந்து இறைவனாக அவதாரம் எடுத்தவர். அவருக்கு உருவ வழிபாடு கிடையாது.இந்த நிலையில்  ஏதோ ஒரு படத்தை வைத்து பாடப் புத்தகத்தில் தவறாக உருவகபடுத்தியுள்ளது.

அதை நீக்கி விட்டு அகிலதிரட்டு ஆகம நூலின் படி கருத்துகளை பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும். தற்போது பாடபுத்தகத்தில் உள்ள படத்தையும் நீக்கவேண்டும். இதை ஒருமாத காலத்திற்குள் சரி செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அய்யா வழி மக்களையும் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைத்தப்படும்"  என்று அறிவித்துள்ளார்.

அய்யா வழி நடப்பவர்கள் பெரும்பாலும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.எனவும் ஏற்கனவே நாடார் சமுதாயத்தை பற்றி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்தது. மேலும் முத்துராமலிங்க தேவரை பெருமை படுத்துவதாக காமராஜரை சிறுமை படுத்தும் வகையில் பாடப்புத்தகங்களில் கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக நாடார் அமைப்புகள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் அய்யா வழியை பின்பற்றும் நாடார்கள் தற்போதைய தமிழக அரசின் நடவடிக்கையால் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அய்யா வைகுண்டர் படத்தை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கவேண்டுமென்று  அவர்கள் வலியுறுத்த காரணம் வரலாறு மீண்டும் திரிக்கப்படும்என்கிற அச்சத்தில் தான் எனக் கருத்து  தெரிவித்தனர்.