நாகை மாவட்டம் அருகே மாட்டிறைச்சி சூப் சாப்பிடுவது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபருக்கு கத்திக்குத்து. அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இச்சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது.
ஆஹா என்ன ருசி! மாட்டிறைச்சி சூப் சாப்பிட்ட முஸ்லீம் இளைஞரை நையப்புடைத்த இந்து முன்னணி! நாகை பதற்றம்!
நாகை மாவட்டம் பொரவச்சேரி பகுதியை சேர்ந்தவர் முகமது பைசான் கடந்த 9ஆம் தேதி இவர் மாலையில் மாட்டிறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். அதை போட்டோ எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அதை பார்த்த அவரது ஃபேஸ்புக் நண்பர்களான இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் 15 பேர் ஒன்று திரண்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கத்தி ,கம்பி மற்றும் கட்டை போன்ற பொருள்களை வைத்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து முகமது பைசானின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், கணேஷ்குமார், மோகன்குமார், அகஸ்தியன் ஆகியோரை நள்ளிரவில் கைது கைது செய்தனர். மற்றும் தலைமறைவாக இருக்கும் அவரது நண்பர்கள் எங்கு உள்ளார்கள்? எனவும் பிடிபட்டவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மற்றும் தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.