உல்லாசம் அனுபவித்துவிட்டு கம்பி நீட்டிய பேஸ்புக் காதலன்! காதலி எடுத்த விபரீத முடிவு!

கிருஷ்ணகிரியில் பேஸ்புக் மூலமாக அறிமுகமான கல்லூரி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததை தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.


கிருஷ்ணகிரி ஜோதி நகரில் வசிப்பவர் தங்கமணி. இவருடைய மகள் அபிநயா தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.  இவருக்கு பேஸ்புக் மூலமாக பொள்ளாச்சியை சேர்ந்த பாலன் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் மகிழ்ச்சியாக சுற்றி வந்துள்ளனர். இதனால் அவ்வப்போது இருவரும் தனிமையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த ஒரு கட்டத்தில்  திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலன், மாணவி அபிநயாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார் 

மேலும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கல்லூரி மாணவி அவரை நம்பி வீட்டை விட்டு சென்றுள்ளார். பின்னர் மாணவியை அழைத்துக்கொண்டு மீண்டும் உல்லாசம் அனுபவித்த பாலன் சேலம் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த அபிநயா, தன்னை கோவை அழைத்துச் சென்ற தங்கும் விடுதி எடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக  கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் புகாரை வாங்காமல் பொள்ளாச்சிக்கு சென்று புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

ஆனால் பொள்ளாச்சி போலீசாரும் புகாரை வாங்காமல் கிருஷ்ணகிரிக்கு சென்று புகார் அளிக்குமாறு திருப்பி அனுப்பியுள்ளனர். இப்படி இரண்டு மாதங்களாக தவித்து வந்த மாணவி மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.   அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது  

தற்போது  வழக்குப்பதிவு செய்து மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த பொள்ளாச்சியை சேர்ந்த பாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது பெற்றோர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதரிடம் புகார் அளித்தனர். 

இதன் அடிப்படையில்  மாணவியை ஏமாற்றி மோசடி செய்தது பாலியல் வன்கொடுமை தற்கொலைக்கு தூண்டியது பொள்ளாச்சியை சேர்ந்த பாலன் மீது மூன்று பிரிவின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்