28 வயது இளைஞன் மீது ஆசை! விமானத்தில் வந்து 45 வயது பெண் செய்த பகீர் சம்பவம்! தேனி பரபரப்பு!

மகன் வயதில் உள்ள இளைஞன் திருமணம் செய்து கொள்ளவில்லை என அவரை தீர்த்துக் கட்ட முயற்சி செய்த விநோத சம்பவம் நடைபெற்றுள்ளது.


தேனி மாவடட்டத்தை சேர்ந்த அசோக்குமார் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு வயது 28. இந்நிலையில் அவருக்கு பேஸ்புக்கில் மலேசியாவை சேர்ந்த அமுதேஸ்வரி என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அமுதேஸ்வரி (45) தன்னைவிட இருமடங்கு கூடுதல் வயதுள்ள பெண் என்பது தெரியாமல் அவருடன் பேசிப் பழகி பின்னர் காதலித்து வந்துள்ளார். இருவரின் காதலும் செல்போனிலேயே வளர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய தாய் வயதில் உள்ள பெண்ணை காதலிக்கிறோம் என்று அசோக்குமாருக்கு தெரியவர உஷார் ஆகிவிட்டார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அமுதேஸ்வரி வற்புறுத்த, அதற்கு அசோக் குமார் மறுப்பு தெரிவிக்க பிரச்சனை ஆரம்பம் ஆனது.

மலேசியாவில் இருந்து அசோக்குமார் செல்போனுக்கு ஒரு பெண் தொடர்பு கொண்டார். அதில் அவர் நீங்கள் திருமணம் செய்ய மறுத்ததால் என்னுடைய அக்கா அமுதேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இதனால் அசோக் குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுமட்டுமின்றி இந்த தகவலை அசோக் குமார் அலுவலகத்திற்கும் தெரிவிக்க, அவர்கள் முறையாக விசாரிக்காமல் அசோக் குமாரை வேலையை விட்டு தூக்கிவிட்டனர்.

இதனால் வேலையை இழந்த அசோக் குமார் தனது சொந்த ஊருக்கே வந்து விட்டார். இதையடுத்து மலேசியாவில் இருந்து புறப்பட்டு தேனிக்கு வந்த கவிதா அசோக் குமாரை சந்தித்து அக்கா இறந்துவிட்டாள். என்னையாவது திருமணம் செய்து கொள் இல்லையெனில் நானும் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன அசோக் குமார் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்க விசாரணை சூடுபிடித்தது. இதில் அசோக்குமாரிடம் அறிமுகமான கவிதா, அமுதேஸ்வரி என்ற பெயர் கொண்ட பெண்கள் ஒருவர்தான் என்றும் அவரது உண்மையான பெயர் விக்னேஸ்வரி என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்த மலேசியாவில் இருந்து வந்து பிரச்சனை செய்த பெண்ணை போலீசார் எச்சரித்து அனுப்பினர். 

இதையடுத் தன்னை ஏமாற்றிய அசோக்குமாரை தீர்த்துகட்ட கூலிப்படையினரை ஏற்பாடு செய்தார். அந்த பெண்ணிடம் இருந்து அசோக்குமாரின் விவரங்களை வாங்கிக்கொண்ட கூலிப்படை போடி அருகே ஒரு விடுதியில் தங்கியிருந்துள்ளது. அவர்களின் நடத்தையில் சந்தேகம் எழவே விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு போட்டுக் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார் கூலிப்படையினரை விசாரித்ததில் அசோக் குமாரை கொல்வதற்கு சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து 9 பேரையும் கைது செய்து ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கொலை செய்ய திட்டம் தீட்டிய விக்னேஸ்வரி மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.