லேட் நைட் சேட்டிங்! 4 ஆண்களிடம் சிக்கிய திருமணமான பெண்! பிறகு நேர்ந்த விபரீதம்!

திருப்பதி அருகே ஃபேஸ்புக்கில் நண்பர்களானவர்கள் உள்ளிட்ட 4 பேரால் ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார்.


ஆந்திர மாநிலம், அனந்தப்புரம் மாவட்டம், ராயதுர்கம் நகரை சேர்ந்த  ராமலிங்க ராஜு என்பருக்கும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அஞ்சலி என்பருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் 3 வயது மகன் உள்ளான். இந்நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ள கடை ஊழியரான மகேஷ் என்பவருடன் அஞ்சலிக்கு பழக்கம் ஏற்பட்டது. 

இதனிடையே  பேஸ்புக் மூலம் அஞ்சலியுடன் சாட்டிங் செய்து வந்த பவன், மல்லிகார்ஜுனா, ஷாருக் என்ற 3 பேரும் அவரது போன் நம்பரை பெற்று பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் அஞ்சலி, மகேஷ் குறித்து கூறிய நிலையில், மகேஷுடன் உள்ள பழக்கம் குறித்து குடும்பத்தில் தெரிவிக்காமல் இருக்க தங்கள் ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. 

மேலும் ஆசைக்கு இணங்க மறுத்தால் கணவர், குழந்தையை கொலை செய்து விடுவோம் என்றும்  ஆசிட் வீசுவோம் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மகேஷும் அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 4 பேரும் அஞ்சலியை மிரட்டி ஓராண்டாக அவ்வப்போது பாலியல்பலாத்காரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டில் யாரும் இல்லாதபோது அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அஞ்சலியை உறவினர்கள் 4 பேர் மீதும் புகார் அளித்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.