நாம் சிறுதும் எதிர்பார்த்திடாத பல சிறந்த நன்மைகளை தருகிறது இந்த இலை!

நம்முடைய இயற்கையில் நமக்கு தேவையான அனைத்து மருந்துகளும் உள்ளது. ஆனால் நமக்கு தெரியாமல் இருப்பதால் தான் அதனுடைய பலன்களை நம்மால் பெற முடியாமல் போகிறது.


இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தான் இந்த முடி உதிர்தல். சிறு வயதிலே முடி கொட்டி விடுவதால் நமக்கு மனஅழுத்தம் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுகிறது. இதில் இருந்து விடுபட இந்த வில்வ இலை மிக சிறந்த மருந்தாக செயல்படும்.

இதற்க்கு வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து நம்முடைய தலைக்கு தேய்த்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு கண் எரிச்சல். மற்றும் முடி உதிர்தல் நீங்கும்.

கோடை காலம் வந்து விட்டால் நமக்கு சரும பிரச்சனைகளோடு கண் பிரச்சனைகளும் வரும். இதற்க்கு காரணம் நம்முடைய உடல் சூடாவது தான். இதனால் நம் கண்கள் சிவத்தல், கண் அரிப்பு, கண் வலி என பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்க்கு இந்த வில்வ இல்லை ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். வில்வ இலையை வதக்கி சூட்டுடன் நம் கண்களுக்கு ஒத்தனம் கொடுத்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

நமக்கு வயிற்று வலி ஏற்படுவதற்கு பழக்க காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கியமாக நாம் உண்ணும் உணவால் தான் இருக்கும். மேலும் நம்முடைய வயிற்றில் உள்ள தொற்று கிருமிகளும் ஆகும். இந்த வில்வ தளிரை வதக்கி நாம் சூடாக்கி குடித்து வந்தால் நம் வயிற்றில் உள்ள நுண்ணயிர்கள் கொல்லப்படும். இதனால் நம் வயிற்று வலி நீங்கும். மேலும் இது வயிறு தொடர்பான பல கோளாறுகளை சரி செய்ய உதவும்.

வில்வ வேரினை பொடியாக்கி அதனுடன் சிறிது நீர் சேர்த்து பத்து போட்டால் தலை வலி நீங்கும். இதன் இலையை பொடியாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு குடித்து வந்தால் மலசிக்கல் நீங்கும். வில்வ இலைக்கு சோகை நோயை நீக்கும் சக்தியும் உள்ளது. மேலும் கை-கால் பிடிப்பு,வீக்கம், உடல் அசதி, போன்றவற்றை நீக்கவும் இந்த வில்வ இலை பயன்படுகிறது..