திடீரென தாக்கிய விஷ வாயு! துடிதுடித்த தம்பியை காப்பாற்றி உயிர் நீத்த அண்ணன்! சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ பயங்கரம்!

சென்னையில் பிரபல வணிக வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழப்பு. விஷவாயு தாக்கிய தம்பியை காப்பாற்ற முயன்றபோது அண்ணன் உயிரிழந்த சோகம்.


சென்னை ராயப்பேட்டையில், அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மாலின் கீழ்தளத்தில் கழிவுநீர் தொட்டி உள்ளது. இதற்கிடையே கழிவுநீரை சுத்தம் செய்வதற்காக, இன்று அதிகாலை 4 மணியளவில், ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர், 5 பேரை அழைத்துச் சென்றுள்ளார்.   

ஐந்து பேரில் ஒருவன் தான் ரஞ்சித்குமார். இவன் கீழ்தளத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு, அத்தொட்டியினுள் இறங்கி உள்ளான் அப்போது துரதிஷ்டவசமாக விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்தார். 

இதனை அறிந்த ரஞ்சித்குமார் அண்ணன் அருண்குமார், தம்பியை காப்பாற்றுவதற்கு கழிவுநீர் தொட்டியில் இறங்கி மேலே தூக்கி விட்டார். பின்னர் அருண்குமார் மேலே ஏற முயன்றபோது, மறுபடியும் துரதிஷ்டவசமாக அந்த விஷவாயு அருண்குமார் தாக்கி அந்த கழிவு நீர் தொட்டியில் பரிதாபமாக உயிரிழந்தார்.  

தகவல் அறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் வகனத்து மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அருண்குமார் உயிரிழந்தையை அடுத்து உடல் உடற்கூறு ஆய்விற்காக அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது. 

மேலும், அண்ணா சாலை காவல் நிலையத்தில் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி கழிவு நீர் தொட்டியில் எவ்வித பாதுகாப்புமின்றி மனிதர்களை உள்ளே அனுப்புவது குறித்து மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் பலர் விமர்சித்துள்ளனர்.