உங்களின் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை உடனே மாத்துங்க! தாமதம் செய்யாதீங்க!

உங்களின் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை உடனே மாற்றும்படி, நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.


சமீபத்தில், ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தங்களின் வலைதளத்தில் ஒரு தொழில்நுட்ப கோளாறு இருந்தது எனவும், அது சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் கூறியிருந்தது. அதாவது, 2 கோடிக்கும் மேலான ஃபேஸ்புக் கணக்குகளின் பாஸ்வேர்டு, எந்த ஒரு என்கிரிப்ஷனும் செய்யாமல், வெறுமனே சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

இதனை, ஃபேஸ்புக் ஊழியர்கள் அனைவருமே பார்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உங்களின் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை உடனே மாற்றும்படி, சைபர் நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  அதேசமயம், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இது தவிர, பாஸ்வேர்டு பாதிப்புக்கு ஆளான பயனாளர்களின் கணக்குகளுக்கு, விரைவில் இதுபற்றி ஃபேஸ்புக் சார்பாக, விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அனைவரும் பேஸ்புக் பாஸ்வேர்டை தற்போது மாற்ற வேண்டியது அவசியம்.

இருந்தாலும், சைபர் நிபுணர்கள் கூறுகையில், உடனடியாக, அனைவரும் ஃபேஸ்புக் பாஸ்வேடை மாற்றி,  அதில், வரும் two-factor authentication என்ற முறையை பின்பற்றும்படி, அறிவுறுத்துகின்றனர். இதன்மூலமாக, உங்களின் ஃபேஸ்புக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்த முடியாது என்றும், அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.