நரேந்திர மோடியை கடுப்பேற்றிய அமெரிக்க உளவுத் துறை! இதுதான் CIA EXIT POLL ரிசல்ட்!

கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களுமே இந்தத் தேர்தலில் பா.ஜ.க.தான் ஆட்சிக்கு வருகிறது என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளன. அதனால் மோடி செம ஹேப்பி. அமித் ஷா இப்போதே ஆட்சிக்கு வந்துவிட்ட மிதப்பில் விருந்து ஏற்பாடுகளை தடபுடலாக செய்துவருகிறார்.


இந்த நிலையில், நரேந்திரமோடியின் வயிற்றில் புளியைக் கரைக்கும் அளவுக்கு அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ. ஓர் எக்சிட் போல் ரிசல்ட் வெளியிட்டுள்ளது. அந்த சி.ஐ.ஏ. ரிசல்ட் படி, பா.ஜ.க. கூட்டணிக்கு 145 முதல் 177 சீட் மட்டுமே கிடைக்கும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த ரிசல்ட்டாக அறிவிக்காமல், மாநில ரீதியாக பா.ஜ.க.வுக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்ற தகவலையும் சி.ஐ.ஏ. வெளியிட்டுள்ளது. அதன்படி, மகாராஷ்டிராவில் மட்டுமே 22 முதல் 26 சீட் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று அறிவித்துள்ளது.

பா.ஜ.க. அதிகம் எதிர்பார்க்கும் உத்தரப்பிரதேசத்தில் 18 முதல் 23 தொகுதிகளும், மேற்கு வங்காளத்தில் மூன்று முதல் ஐந்து தொகுதிகள் வரையிலும் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மரியாதைக்குரிய சீட் கிடைக்குமாம்.

இதுதவிர, நமது தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு அதிகபட்சம் 7 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு குறித்து மோடியிடம் தெரிவிக்கப்பட்டதும், கடும் கோபத்துக்கு ஆளானாராம். அவர்களால், அவர்கள் நாட்டில் நடந்த தேர்தலிலேயே சரியாக கணிக்க முடியவில்லை. அவர்கள் சொல்வது தவறாகத்தான் இருக்கும் என்று அமைதியாகிவிட்டாராம்.