உன் பொண்டாட்டி என் கூட எப்டி இருக்கா பாத்தியா? காதலியின் அந்த புகைப்படங்களை கணவனுக்கு அனுப்பிய விபரீத காதலன்!

காதலியை பழிவாங்குவதாக நினைத்து அவருடன் நெருக்கமாக இருந்த படங்களை வைத்து அவரது திருமணத்தை நிறுத்திய நபரை போலிசார் கைது செய்துள்ளனர்


தருமபுரி மாவட்டடம் மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்த ராம்ராஜ் என்பவரும், மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து விட்ட நிலையில் ராம்ராஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து ராம்ராஜின் காதலி தனக்கு வீட்டில் ஏற்பாடுசெய்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். பின்னர் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்கியது. நேற்று வெள்ளிச்சந்தையில் உள்ள ஒரு கோயிலில் அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் அதிர்ச்சி காத்திருந்தது.

ராம்ராஜ் தன்னுடைய முன்னாள் காதலியின் மாப்பிள்ளை வீட்டாருக்கு போட்டோக்கள், வீடியோக்களை அனுப்பி உள்ளார். அதில், அவரும், முன்னாள் காதலியும், நெருக்கமாக இருந்த போட்டோக்கள், வீடியோக்கள் இருந்தன. இதனை பார்த்த மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நேற்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. 

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ராம்ராஜை கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னாள் காதலி கைவிட்ட ஆத்திரத்தில் இப்படி செய்துவிட்டதாகவும், திருமணம் செய்து கூறினார்.

நான் திருமணம் செய்து கொண்டாலும் முன்னாள் காதலியை மறக்க முடியாமல் தவித்ததாகவும், அதனால்தான் திருமணத்தை தடுத்து நிறுத்தியதாகவும் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.