காணாமல் போன சட்டக்கல்லூரி மாணவி! குற்றவாளி சுவாமி சின்மயானந்த் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக அதே கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளார்.


உத்தரப்பிரதேசத்தில் ஷாஜகான்பூர் நகரில் சுவாமி சுக்தேவனந்த் சட்ட கல்லூரி அமைந்துள்ளது. இதில் மாணவ மாணவியர் என இருபாலரும் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியின் தலைவராக இருப்பவர் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் ஆவர்.

கல்லூரியின் தலைவர் அங்கு படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அதே கல்லூரியில் படித்து வரும் 23 வயது மாணவி ஒருவர் அவர் மீது பாலியல் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கல்லூரியின் தலைவர் அங்கு படித்து வரும் ஏழ்மையான மாணவிகளை தனியே வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதனை பெற்றோர்களிடம் அல்லது வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார். கல்லூரி தலைவர் சின்மயானந்த் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரத பிரதமர் மோடியும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும் அப்பெண்மணி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் புகார் கொடுத்த மாணவியை மூன்று நாட்களாக காணவில்லை என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.