சிதம்பரத்துக்காக களத்துக்கு வந்த இ.வி.கே.எஸ்.இளங்கோவன்! ஜெயலலிதா குறித்தும் கடும் விமர்சனம்!

சிதம்பரம் கைது செய்யப்பட்டதும், பா.ஜ.க.வைப் போலவே காங்கிரஸ் கட்சியிலும் பல தலைவர்கள் சந்தோஷப்பட்டார்கள். இதற்காக கே.எஸ்.அழகிரி நடத்திய போராட்டத்துக்கு இ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட பல தலைவர்கள் வரவே இல்லை.


ஆக, தமிழக காங்கிரஸ் கட்சியில் சிதம்பரத்துக்கு எதிர்ப்பு இருப்பது உண்மைதான் என்று நம்பப்பட்டது. இந்த நிலையில் திடீரென களத்துக்கு வந்துள்ள இ.வி.கே.எஸ். இளங்கோவன், 

நாட்டின் நீதித்துறை பாஜக அரசுக்கு அடிமையாக உள்ளதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ப.சிதம்பரம் கைதை கண்டித்து சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில்,

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய இளங்கோவன், ‘நாட்டின் பொருளாதாரம் நசிங்கியுள்ளது. காஷ்மீரில் மக்கள் சுதந்திரம் பறி போகி உள்ளது. இதனை திசை திருப்பவே சிதம்பரத்தை கைது செய்துள்ளனர். 

நிறுவனங்கள் , சிறிய கடைகள் மூடப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்வு, தமிழகத்தில் பால் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை திச திருப்பும் வகையில் இந்த கைது நடவடிக்கை..

காங்கிரஸ் கட்சியை அசிங்கபடுத்த வேண்டும் என்று அடிப்படையில் சிதம்பரத்தை கைது செய்துள்ளது பாஜக அரசு. இந்த நாட்டை பாஜக விடம் இருந்து காப்பாற்ற தீவிர போராட்டத்தில் ஈடுபட வேண்டும். சிதம்பரம் வீட்டுச் சுவர் ஏறியது கேவலமான செயல்.

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த பொருளாதார வளர்ச்சி இன்று பாதாளத்தில் உள்ளது. 

வழக்கு நடத்துவது பதிலாக காங்கிரஸ் கட்சியும் சிதம்பரத்தையும் பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக அரசு செய்திருக்கிறது.

ஒரு காலத்தில் அதிகமாக ஆடியவர் இன்று கடற்கரையில் இருக்கின்றார். உயிரோடு இருந்திருந்தால் சிறைக்கு சென்றிருப்பார் என்று ஜெயலலிதாவையும் மறைமுகமாக தெரிவித்தார். ஒருவழியாக சிதம்பரத்துக்கு ஆதரவு பெருகுகிறது. இது காங்கிரஸ்க்கு நல்ல செய்திதான்.