இயக்குனர் முருகதாஸ் ஒரு சில்லறை! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரம்!

தர்பார் படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து பேஸ்புக் பிரபலம் பாலகணேஷ் என்பவர் வெளியிட்டுள்ள பதிவு படிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும் வைக்கிறது. அவர் எழுதியுள்ள பதிவின் தொகுப்பு இதோ.


இயக்குனர் முருகதாஸ் ஒரு சில்லறைன்னு நமக்கு ஏற்கனவே பல விஷயங்கள் மூலமா தெரியவந்திருச்சி. சர்கார் மேட்டர்ல டவுசரை கழட்டி ஓடவிட்டாங்க. இன்னைக்கி தற்செயலா யூ-டியூப்-ல இயக்குனர் நந்தகுமார் பேட்டி பார்த்துட்டு ஷாக் ஆயிட்டேன். ரமணா கதை திருட்டுங்கிறது ஒருபக்கம் ஒரு புது அதிர்ச்சி. ஆனா பல காட்சிகள் கூட அப்படியே சுட்டிருக்காங்கன்னு கேள்விப்படும்போது ச்சீ-ன்னு ஆயிருச்சு.

இந்த பேட்டியில நந்தகுமார் கடைசியா ஒரு வார்த்தை சொன்னாரு. "ஒரு தடவ திருடி பழகிட்டா அதை மாத்தவே முடியாது" அப்படின்னாரு. நூத்துல ஒரு வார்த்தை. தீனா பார்த்துட்டு விஜயகாந்த் கதை சொல்ல கூப்பிடுறாரு. அப்போ முருகதாஸ் கிட்ட ஒன்லைன் கூட இல்ல. ஆனா அடுத்த ஒரு மாசத்துல ஷூட்டிங் போயிட்டாங்க.

பத்து நாள் ஷூட்டிங் முடிஞ்சப்புறம், ஒருநாள் தற்செயலா வேற ஒரு சோர்ஸ் மூலமா விஜயகாந்த் கிட்ட நந்தகுமார் கதை சொல்ல போறாரு. பாதி கதையை கேட்டதுமே விஜயகாந்த் எந்திரிச்சி உள்ள போயிர்ராரு. ஏன்னா அவருக்கு இப்ப நாம நடிக்கிற படத்தோட கதை இதுதான்னு புரிஞ்சிருச்சி.இது நடந்து ஒரு மாசம் கழிச்சி விஜயகாந்தே கூப்பிட்டு கதை கேட்டு பண்ணதுதான் தென்னவன். அது சரியா ஓடல. அது வேற விஷயம்.

ஆனா பாருங்க இந்த ரமணா கதை தமிழ் தெலுங்குல ஒரேநேரத்துல பண்ணவேண்டியது மிஸ்ஸாகி, அப்புறம் இவருக்கே சொல்லாம அதை தெலுங்குல ஷாஜி கைலாஷ், நாகர்ஜுனா வச்சி ஆரம்பிச்சி, இந்த கதை பிரச்சினை தெரிஞ்சதும் அது டிராப் ஆயிருச்சு. அப்புறம் சரத்குமார்-க்கு ரமணா கதையை சொல்லி அவர் உடனே பண்ணலாம்னு சொல்லி அது நடக்காமயே போயிருச்சு.

இதுல சோகமான விஷயம் என்னன்னா 1998லேயே மூன்றை கோடி ரூபாய் பட்ஜெட்-ல கே.டி.குஞ்சுமோன் தயாரிப்புல அவர் பையனை ஹீரோவா வச்சி எடுத்த கோடீஸ்வரன் படத்துக்கும் இவர்தான் இயக்குனர். இதுவரைக்கும் அந்த படம் வெளிவரல.

ஒரு படைப்பாளி எந்தளவுக்கு மனசு கஷ்டப்பட்டிருப்பான்? ஆனா முருகதாஸ் மாதிரியான ஆட்கள் கொஞ்சமும் மனசாட்சி இல்லாம இந்த அநியாயங்களை செய்றது எல்லாம் கேவலம். வெற்றிகரமான இயக்குநர்ங்கிறதால மீடியா ஆதரவும் கிடைச்சிருது. சர்க்கார் விவகாரத்துலயே கூட பிஹைண்ட் வுட்ஸ் மாதிரியான சேனல்கள் அவருக்கு சொம்பு தூக்குவதை பார்த்தோம். ஆனா 38 படம் அசிஸ்டண்டா வேலை பார்த்து, இத்தனை வருஷத்துல ரெண்டே படம் மட்டும் பண்ணி, அதுல ஒன்னே ஒன்னு ரிலீசாகி..

ஏதோ இப்போ பாக்யராஜ் மாதிரி ஒருத்தர் உக்காந்திருக்கிறார்ங்கிற ஆறுதலையும் அவர் தன்னோட பேட்டியில வெளிப்படுத்துனாரு. ஏன்னா ரமணா வந்தப்போ இன்டர்நெட், மீடியா எதுவும் இப்போ இருக்குற அளவுல கிடையாது. விஷயம் வெளியவே தெரியாது. அதை தனக்கு சாதகமா யூஸ் பண்ணவங்க நிறைய.

இப்போ குறைஞ்சபட்சம் பணமாவது கிடைக்குது. கோமாளி படத்துக்கும் இதே பிரச்சினை வந்து கடைசி நேரத்துல பாக்யராஜ் எல்லாம் தலையிட்டு சுமுகமா முடிச்சாங்க. தர்பார் படம் வந்தாதான் பல பஞ்சாயத்துகள் வெளிய வரும் போல. பார்ப்போம். ரஜினி படமாவே இருந்தாலும் கதை திருட்டு லொட்டு லொசுக்கு ஏதாவது தெரிய வந்தா முருகதாஸ் வச்சி செய்யப்படுவார்.

நன்றி: பேஸ்புக் பிரபலம் பாலகணேஷ்.