எடப்பாடியாரின் தேர்தல் வியூகத்திற்கு பலே பாராட்டு..

இயல்பாக, மக்களில் ஒருவராக, மக்கள் தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுவரும் பிரசாரத்துக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. தேர்தல் நெருக்கத்தில் மக்கள் கூட்டமும் அதிகரித்துவருகிறது.


எடப்பாடியார் மக்களிடம் இயல்பாகத்தான் பேசுகிறார். “நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு மம்பட்டி பிடித்து விவசாயம் செய்யவும் தெரியும். எந்த பருவத்திற்கு எந்த விதை போட வேண்டும் என்றும் தெரியும். எனக்கு பிரதான தொழில் விவசாயம்.

ஏழை, எளிய மக்களின் கஷ்டத்தை என்னால் புரிந்து கொள்ள முடியும். நான் ஸ்டாலின் போல வாரிசு இல்லை. என் குடும்பமும் அரசியல் குடும்பம் இல்லை,” என்று செல்லும் இடமெல்லாம் தனது எளிய பின்னணியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முனைப்பு காட்டி வருகிறார்.

மேலும், ஸ்டாலின் போல கைகளில் கிளவுஸ், ஹேர் ஸ்டெயில் மாற்றம், மக்களிடம் இடைவெளியை கடைபிடிப்பது என்று இல்லாமல், விவசாயிகளுடன் களத்தில் இறங்கி பேசுவது, பொதுமக்களிடம் சகஜமாக பேசுவது என, ஸ்டாலினை விட ஒரு படி முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

ஏற்கனவே, நாடாளுமன்ற தேர்தலின் போது, டீக்கடையில் வேலை பார்த்தவன் நான் என்பதை முன்னிறுத்தி பிரதமர் இமாலய வெற்றி பெற்றார். தற்போது, அதே அஸ்திரத்தை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார். ஆனால், ஸ்டாலினால் இதுபோன்று எதுவும் கூற முடியாத நிலை என்பதால், தான் சென்னை மேயராக இருந்து 35 வருடங்கள் அரசியலில் இருந்து படிப்படியாக மேலே வந்தவன் எனக் கூறி வருகிறார் ஸ்டாலின். இதெல்லாம் செல்லுபடியாகாது என்பதுதான் இன்றைய நிலவரம்.