கொரானாவுக்கு எதிரான இந்த போரில் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்! கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு இது!

உங்கள் வீட்டுப் பக்கத்தில் அல்லது பணிபுரியும் இடத்தின் அருகில் இருந்து கொரானா தொற்று பாதிக்கப்பட்ட நபர் என அடையாளம் காணப்பட்டு யாரையாவது ஆம்புலன்சில் அழைத்து சென்றால் தயவுசெய்து அவர்களை வீடியோ படம் எடுக்காதீர்கள்....


அதை சமூக வலைதளங்களில் பரப்பாதீர்கள். இன்னும் சொல்லப்போனால் அப்படி செய்பவர்களை ஊக்குவிக்காதீர்கள். இப்படி படம் எடுத்து அவர்களை மனம் வருத்தப்பட வைக்க வேண்டாம். மாறாக உங்களது பால்கனியில் இருந்தோ அல்லது நமது கேட்டின் அருகில் இருந்தோ தூரத்தில் நின்று அவரை நோக்கி கையை உயர்த்தி நாங்க இருக்கோம்.... தைரியமாக இருங்க.... விரைவில் நல்லபடியாக குணமடைந்து வாருங்கள்.... என அவர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி அனுப்புங்கள்.

ஏனெனில் தற்பொழுது கொரானா பரவிவரும் வேகத்தைப் பார்த்தால் உங்க வீட்டு வாசலிலும் ஒரு நாள் ஆம்புலன்ஸ் வந்து நிற்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.

அவர் எவ்வளவு சிரமமான சூழ்நிலையை சந்திக்க உள்ளார் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். எனவே தயவு செய்து....

1. அவர்களை மதியுங்கள்.

2. அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்....

3. நாம் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதை அவர்கள் உணரும் அளவுக்கு நடந்து கொள்ளுங்கள்.

4. மற்றவர்களிடம் அவர்களை குறித்த பயத்தையோ, பீதியையோ, ஏற்படுத்தி இகழ்ச்சி உண்டாக்க வேண்டாம்.

அவர் எதிர்பாராத வந்த கிருமித் தொற்றினால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்தானே தவிர சட்டவிரோத செயல் புரிந்த குற்றவாளி அல்ல. நோய் பாதிப்பிலிருந்து அவர் மீண்டு விடுவார். ஆனால் மற்றவர்கள் அவரை நடத்திய விதத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து ரணங்களில் இருந்து அவர் எப்பொழுதும் விடுபட முடியாது. அது அவரை எப்பொழுதுதும் மனதளவில் துன்புறுத்திக் கொண்டே இருக்கும்.

கொரானாவுக்கு எதிரான இந்த போரில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். எனவே அன்பையும் நம்பிக்கையையும் மட்டுமே மற்றவர்களிடம் பரப்புங்கள். பீதிகளையும் அவதூறுகளையும் பரப்ப வேண்டாம். நாம் நாகரிகம் மிக்கவர்கள், அன்பானவர்கள், மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதை அனைவருக்கும் உணர்த்துங்கள். நாமும்பாதுகாப்பாக இருப்போம்.... பத்திரமாக இருப்போம்.... அன்புடையவர்களாகவும் இருப்போம்.