கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனை சென்ற திருநங்கை..! பிறகு கதறியபடி வெளியிட்ட வீடியோ! அங்கு நடந்தது என்ன?

உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தடுத்த காவலர் ஒருவர் அவதூறாக பேசியதாக ஈரோட்டில் திருநங்கை கண்ணீருடன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளத்தை சேர்ந்த திருநங்கை ஆயிஷா பாத்திமா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால், “வணக்கம் என் பெயர் ஆயிஷா பாத்திமா ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளத்தில் வசிக்கிறேன். நான் ஒரு திருநங்கை. எனக்கு சில நாட்களாக இருமல், தலைவலி மற்றும் காய்ச்சல் இருந்து வருகிறது. இதனால் எனக்கு தொற்று இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. எங்கள் ஊரில் மருந்துக் கடை திறக்காததால் அரசு மருத்துவமனைக்கு செல்ல முயற்சித்தேன்.

அப்போது கனிராவுத்தர்குளத்தில் உள்ள காவலர் ஒருவர், அவர் பெயர் தெரியவில்லை என்னை எங்கள் ஊரில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி என்னைப் பார்த்து நீயெல்லாம் எதற்கு இருக்கிறாய் செத்துவிடு என கூறினார். மேலும் சில போலிசார் என்னை தாக்கினர். எங்களைப் போன்றவர்கள் இறந்துவிடுவதற்காக இத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள் போராடுகிறார்கள். இத்தனை போலீஸ் பாதுகாப்பில் இருக்கிறார்கள். ஒருவேளை எனக்கு தொற்று ஏற்பட்டு மற்றவர்களுக்கு பரவிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் சென்றேன்.

உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் முதலமைச்சரும், ஆட்சியரும் கூறுகிறார்கள். ஆனால் இதுபோன்ற போலீசார் தடுக்கும்போது எப்படி செல்லமுடியும். ஒருவேளை எனக்கு தொற்று இருந்து மற்றவர்களுக்கு பரவினால் அது பெரிய பாதிப்பு ஆகிவிடும். ஆனால் எங்களை பார்த்து தற்கொலை செய்து கொள் என்கிறார்கள். நான் தற்கொலை செய்து கொள்ளவேண்டுமா என்று சொல்லுங்கள்” என்று கண்ணீர் மல்க பேசுகிறார் ஆயிஷா பாத்திமா. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது