திருமணமாகி 3 மாதம்! கனவுகளுடன் வாழ்வை தொடங்கிய இளம் தம்பதி! பைக்கில் சென்ற போது ஏற்பட்ட பயங்கரம்!

ஈரோட்டில் திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் கணவன் மனைவி விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம் நிச்சாம்பாளையம் பிரணாப் நகரை சேர்ந்த பிரகாஷ் மற்றும் மஞ்சுளா ஆகியோருக்கு மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 19 வயதான மஞ்சுளா என்பவர் கல்லூரியில் படித்து வர அவரது கணவர் பிரகாஷ் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதை அடுத்து ஒருநாள் பிரகாஷ் மஞ்சுளா மற்றும் அவரது உறவினர் செம்பருத்தி ஆகிய மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேன் அவர்கள் மீது மோதியதில் மூவரும் சட்டென்று தூக்கி வீசப்பட்டனர்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரகாஷும் மஞ்சுளாவும் உயிரிழக்க செம்பருத்தி என்பவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையடுத்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி மூன்றே மாதங்களுக்குள் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.