கை நிறைய காசு! தினமும் ஒன் ஹவர் தான் டூட்டி! கல்லூரி மாணவிகளை சீரழிக்கும் ஈரோடு புரோக்கர்கள்!

ஈரோட்டில் இரண்டு பெண்களை கட்டாயமான முறையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்


ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் ஒரே வீட்டில் இரண்டு பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம் நடத்தி வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரப்பன்சத்திரம் காவல் நிலைய அதிகாரிகள் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் தாங்கள் வெளி ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்றும், எங்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி  எங்களை அழைத்து வந்து கட்டாயப்படுத்தி விபச்சார தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், இரண்டு பெண்களும் பரபரப்பு புகார் ஒன்றை காவல் துறை அதிகாரிகளிடம் அளித்தனர். அந்த பெண்கள் இருவருமே கல்லூரி மாணவிகள் என்று சொல்லப்படுகிறது.

ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த அவர்களுக்கு தங்கள் தோழி மூலமாக புரோக்கரின் பழக்கம் கிடைத்துள்ளது. பின்னர் ஒரு நாளைக்கு ஒன் ஹவர் தான் டூட்டி, கை நிறைய காசு சம்பாதிக்கலாம் என்று கூறி இந்த தொழிலுக்கு அழைத்து வந்துள்ளனர். 

இதையடுத்து ப்ரோக்கர் வேலையில் ஈடுபட்ட விஜயகுமார் மற்றும் அவரது நண்பரான பிரவீன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காப்பகத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.