கடப்பாறை! பிரமாண்ட சுத்தியல்! கோவிலுக்குள் நுழைந்து சிலைகளை தரைமட்டமாக்கிய பயங்கரம்! அதிர்ச்சி CCTV!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே காளியண்ணன் சிலைகளை மர்மநபர்கள் சேதப்படுத்தியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.


ஈரோடு மாவட்டம் சிவகிரியில் பொன் காளியம்மன் கோவில் தொடர்பாக ஒரே சமூகத்தைச் சேர்ந்த 2 பிரிவினர் இடையே தொடர்ந்து சண்டை நிலவி வருவதாக கூறப்படுகிறது. காளியம்மன் கோயிலை கூரைக்காளியண்ணன் - இளையக்காளியண்ணன் என்ற சகோதரர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தரப்பு மக்களுக்காக மீட்டுக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

அதை நினைவில் கொள்ளும் வகையில் தெப்பம்பாளையத்தில், காளியண்ணன் சகோதரர்களுக்கு ஒரு பிரிவினர் சிலை அமைத்து வழிபட்டு வந்தனர். சிலைகள் அமைப்பதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அந்த சிலைகளை அகற்றக் கோரி, மற்றொரு தரப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில்காளியண்ணன் சிலைகள் புதுப்பிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சிலர் நள்ளிரவில் அந்த சிலைகளை கடப்பாரையாலும், சுத்தியாலும் சேதப்படுத்தி உள்ளனர். இந்தகாட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. தகவல்அறிந்து வந்த போலீசார் முகமூடி அணிந்து சிலைகளை சேதப்படுத்திய 7 மர்மநபர்களை தேடி வருகின்றனர்.  

சிலைகள் உடைக்கப்பட்டதால் கிராம மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். சிலைகளை உடைத்த மர்மநபர்களை கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒரே கிராமத்தில் இருதரப்பினர் இடையே பதற்றம் நிலவுவதால், போராட்டம் நடக்கும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.