3 மாதங்களுக்கு முன் திண்டுக்கல்லில் மாயமான இளம் பெண்! ஈரோட்டில் சடலமாக கண்டுபிடிப்பு! காதல் கணவன் செய்த செயல்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கண்ணகுலம் கிராமத்தை சேர்ந்தவ சுகுணா கடந்த 3 மாதத்திற்கு முன் மாயமானர். இதுகுறித்து பெற்றோர் போலீசாரிடம் அளித்த புகாரில் தங்களது மகள் சுகுணாவை அதே பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான வேல்முருகன்தான் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் ஈரோடு சாஸ்திரி நகரில் இளம்பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் சடலமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். உயிரிழந்த பெண் 3 மாதத்திற்கு முன்னர் வேடசந்தூர் அருகே மாயமான சுகுணா என்பதையும் காவல்துறை உறுதிப்படுத்தி பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்து அங்கு விரைந்த பெற்றோர் மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும் மகளை கடத்தி சென்ற வேல்முருகன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி சுகுணாவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோரை சமாதானம் செய்து உடலை ஒப்படைத்த போலீசார் சுகுணா உயிரிழப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். 

இந்நிலையில் சுகுணாவை கடத்தி சென்றதாக கூறப்படும் வேல்முருகன் தான் அவரை திருமணம் செய்துகொண்டு 3 மாதங்களாக ஈரோட்டில் குடித்தனம் நடத்திவந்தது தெரியவந்துள்ளது. தன்னுடைய கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை தெரிந்துகொண்டதாலோ என்னவோ சுகுணா விஷம் குடித்துவிட்டு மயங்கியுள்ளாரா அல்லது கணவரே கொலை செய்துள்ளாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து வழக்கு தொடர்பாக போலீஸ தேடுவதை அறிந்துகொண்டு வேல்முருகன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீஸ் விசாரணை நடத்திவருகிறது