குழந்தை இல்லை! ரகசிய காதலனுடன் சென்ற மனைவி! அதிர்ச்சியில் பைத்தியமாகி பிச்சை எடுக்கும் அரசு ஊழியர்! ஈரோடு பரிதாபம்!

ஈரோடு மாவட்டத்தில் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் தனது மனைவி வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டு சென்றதால் விரக்தி அடைந்து மனைவியின் நினைப்பால் பைத்தியமாக மாறி ஈரோடு பகுதியில் பிச்சை எடுத்து வந்துள்ள அரசு ஊழியர் இந்நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அவரை மீட்டு அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.


ஈரோடு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பிச்சைக்காரர்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களை பராமரித்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் பணியில் ஈரோட்டைச் சேர்ந்த அட்சயம் அறக்கட்டளையைச் சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு பைத்தியம் பிடித்தவர் போல் ஒரு நபர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.

அவரிடம் சென்று கேட்டபோது அவரது பெயர் சிவகுமார் எனவும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலம் பகுதியில் அலுவலராக பணியாற்றிய நபர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் அவரிடம் எதற்காக இந்த மாதிரியாக பிச்சை எடுக்கிறீர்கள் எனக் கேட்டபோது அதற்கு கண்ணீருடன் திருமணமாகி 3  ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை

இந்நிலையில் முதலில் நன்றாக குடும்பம் நடத்தி வந்தோம் எனவும் சில நாட்கள் தனது மனைவி தன்னுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் மிகுந்து வரும் மன வருத்தத்திற்கு ஆளானா சிவகுமார்.

 பின்னர் சில நாட்களிலேயே குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். தனது அலுவலகப் பணியை தொடர முடியாமல் போய் விட்டது எனவும் அதனால் தனது சொந்த செலவிற்கு பணம் இல்லாமல் போனதே இதையடுத்து ஈரோடு பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்கத் தொடங்கி விட்டேன்.

என அந்த இளைஞர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து ஒரு அரசு ஊழியர் பேருந்து நிலையத்தை இந்த மாதிரியாக பிச்சை எடுப்பது அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.