இளைஞனை துண்டு துண்டாக வெட்டி சாக்குப் பையில் வைத்திருந்த தம்பதி! ஈரோட்டில் பயங்கரம்!

ஈரோட்டில் பணம் தர மறுத்த பிகார் இளைஞன் ஒருவனை துண்டு துண்டாக வெட்டி சாக்கு பையில் போட்டு தன் வீட்டில் வைத்திருந்த தம்பதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


பீகாரில் இருந்து வந்து ஈரோட்டில் உள்ள இராசபாளையம் பகுதியில் வசித்து வந்த இளைஞர் நவீன் குமார். இவர் அருகில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். 

இதே பகுதியில் வசித்து வந்த நிதீஷ் குமார் மற்றும் சசி என்னும் தம்பதியினர் இந்த இளைஞனை சுமார் இரண்டரை லட்சம் வரை கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளனர். இதனை தர மறுத்த நவீன் குமாரை, இதனால் ஆத்திரமடைந்து துண்டு துண்டாக வெட்டி சாக்குப் பையில் போட்டு வீட்டில் வைத்திருந்த இந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். 

மேலும், இவர்களை விசாரித்ததில் மூன்று சாக்குப் பைகளில் இவரின் உடல் பாகங்களை வைத்திருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இந்த அதிர்ச்சியில் உள்ளனர்.