70 வயதில் புரோக்கர் வேலை! 2 பெண்களை வைத்து தொழில் செய்த பகீர் மூதாட்டி! போலீசில் சிக்கிய பின்னணி!

ஈரோட்டில் ஆதரவுவற்ற பெண்களிடன் ஆசை வார்த்தை காட்டி வேலை வாங்கி தருவதாக கூறி விபசாரத்தில் ஈடுபட வைத்த மூதாட்டி தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மூதாட்டியின் பெயர் தான் சரோஜா. இவருக்கு சுமார் 72 வயது இருக்கும். இவர் பல அனாதை மற்றும் ஆதரவுவற்ற பெண்களிடம் ஆசை வார்த்தை காட்டி வேலை வாங்கி தருவதாக கூறி விபசாரத்தில் ஈடுபட வைத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தான் காவல் துறையிக்கு தெரிய வந்துள்ளது. பின்னர் தகவல் அறிந்த காவல் துறையினர் அந்த மூதாட்டியை கைது செய்துள்ளார்.

இந்த விவகாரத்தை காவல்துறையினருக்கு தெரியவைத்தவர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர். இவருக்கு சுமார் வயது 27 இருக்கும். சசிகுமார் குமாரபாளையம் பாப்பம்பாளையம் பகுதியில் வாட்டர் பில்டர் சர்வீஸ் ஊழியராக பணியாற்றி வருகிறார்.. இந்த நிலையில் சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்த சரோஜா தனது வீட்டுக்கு வாட்டர் பில்டர் சர்வீஸ் செய்ய வேண்டும் என்று சசிகுமாரிடம் கூறியுள்ளார்.

அவரும் சரோஜா வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த வேலையில் அந்த வீட்டில் 35 வயதில் 2 பெண்கள் இருந்ததை சசிகுமார் பார்த்துள்ளார். பின்னர் சரோஜா சசிகுமாரிடம் என் வீட்டில் 2 பெண்கள் இருக்கிறார்கள்.அவர்களை உங்கள் இன்பத்திற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் அதற்காக வேறும் 1000 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என்று மிகவும் சாதுர்யமக கூறியுள்ளார் அந்த மூதாட்டி. 

மூதாட்டி கூறியதை கேட்ட சசிகுமார், தற்போது என்னிடம் பணம் இல்லை. அதனால் வெளியே சென்று ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருகிறேன் என்று கூறி அங்கு இருந்து சென்றார். அப்போது சரோஜா வீட்டில் இருந்த 2 பெண் சசிகுமாரிடம் ”நாங்கள் அப்படிப்பட்ட பெண்கள் இல்லை”. இந்த சரோஜா ஆசை வார்த்தை காட்டி எங்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி இப்படி விபசாரத்தில் ஈடுபட வற்புறுத்துகிறார். ”எங்களை காப்பாற்றுங்கள்” என்று சசிகுமாரிடம் கெஞ்சியுள்ளார்கள்.

 இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சசிகுமார், அந்த பெண்களிடம் ’நான் பணம் எடுத்து வருவதாக கூறி உள்ளேன்’. வெளியே சென்று உங்களை மீட்கிறேன் என்று கூறியபடி வெளியே சென்றார். பின்னர், இது குறித்து ஈரோடு தாலுகா காவல்துறையினரிடம் புகார் செய்தார் சசிகுமார்.

சசிகுமாரின் புகார் அடிப்படையில், காவல்துறையினர் சம்பவம் நடந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். பின்னர் அங்கு விபசாரத்தில் தள்ளப்பட்ட 2 பெண்களை மீட்டனர். பிறகு வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய சரோஜாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், மீட்கப்பட்ட 2 பெண்களும் ஈரோட்டில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதனைடுத்து ஈரோடு தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.