உலகையே கொரோனா எனும் பேரிடர் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேலையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு Environmental Assessment Impact (EIA) 2006 சட்டத்தில் திருத்த வரைவினைக் கொண்டு வந்து இந்தியாவின் சூழலியலுக்கு மீது மிகப்பெரிய அச்சுறுத்தலை நிகழ்த்தி இருக்கின்றது மத்திய பாரதிய ஜனதா தலைமையிலான மோடி அரசு என தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அமைப்புகள் கடும் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
சுற்றுசூழல் பேரழிவு வருகிறது… இது யாருக்கான அரசு..?

இதுகுறித்து, இன்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவுக் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வரைவுத் திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் நாட்களை 30 நாட்களில் இருந்து 20 நாட்களாகக் குறைத்திருப்பதும்,
மக்களிடம் கருத்துக் கேட்பு செயல்முறை கால நாட்களை 45ல் இருந்து 40 நாட்களாக குறைத்திருப்பதும், நிறுவனங்களின் செயல்பாட்டு அறிக்கையை தாக்கல் செய்யும் காலத்தை 6 மாதத்தில் இருந்து 1 வருடமாக அதிகரித்திருப்பதும் இந்த அரசு மக்களுக்கான அரசு அல்ல கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கான அரசு என்பதையே பறைசாற்றுகிறது.
இத்திட்டம் தொடர்பாக கட்டுரைகளை வெளியிட்ட Let india breath (இந்தியா சுவாசிக்கட்டும்) போன்ற சூழலியல் இணையதளங்கள் முடக்கப்பட்டது பல்வேறு விதமான சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது என்று தெரிவித்துள்ளார்.