அமைச்சருக்கு நெருக்கமானவர் வீட்டில் கட்டுகட்டாக பணம்! ரூ. 15 கோடி சிக்கியதால் பீதியில் எடப்பாடி!

சென்னையில் உள்ளாட்சித்துறை ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்ட படத்தின் புகைப்படங்களை வருமான வரித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.


திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பணத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டுக்கட்டாக வும் மூட்டை மூட்டையாக இருந்த பணத்தை பார்த்து பலரும் மூக்கின் மேல் விரலை வைத்தனர்.

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் வீடியோ மட்டும் வெளியானது எப்படி என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். உள்ளாட்சித் துறை அமைச்சரான எஸ் பி வேலுமணி மிகவும் நெருக்கமான ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சோதனையின்போது 15 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியதை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

சபேசன் வீட்டில் 15 கோடி ரூபாய் சிக்கல் தொடர்பான எந்த வீடியோவும் வெளியாகாத நிலையில் துரைமுருகன் வீட்டில் சிக்கிய பணம் குறித்த வீடியோ மட்டும் வெளியானது எப்படி என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் கேள்வி எழுப்பி சில மணி நேரங்களில் சபேசன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் வீடியோ என்று சில காட்சிகள் வைரல் ஆனது.

அந்த வீடியோ சபேசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்புடையதுதான் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினார். துரைமுருகன் வீட்டில் சிக்கிய பணமாவது 200 ரூபாய் தாள்கள் ஆக இருந்தது. ஆனால் சபேசன் வீட்டில் சிக்கிய பணம் அனைத்துமே ரூபாய் 2000 மற்றும் ரூபாய் 500 தாள்கள் ஆகும்.

இந்த பணக்கட்டுகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளதால் ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சபேசன் வீட்டிலும் சோதனையைத் தொடர்ந்து விசாரணை நடைபெறும் அவருடன் தொடர்புடைய எஸ் பி வேலுமணி இடம் விசாரிக்கப்படும் என்றெல்லாம் ஸ்டாலின் கேள்வி எழுப்பி வருகிறார்.

துரைமுருகன் வீட்டில் பணம் சிக்கியதால் திமுகவிற்கு பின்னடைவு என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு கருதி வந்த நிலையில் சபேசன் வீட்டிலும் அதாவது அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான சபேசன் வீட்டிலும் இதே போன்று பணம் சிக்கியுள்ளது ஆளும் கட்சி தரப்பை பீதியில் ஆழ்த்தியுள்ளது.