இந்தி அப்புறம் ஆங்கிலம் தான்! தமிழர்கள் விரட்டும் Paytm! அதிர்ச்சி காரணம்!

2010ம்‌ ஆண்டு உத்திரபிரதேசம் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது பேடிஎம் ஈ காமர்ஸ் நிறுவனம்.


தற்போது இந்தியா முழுவதும் சுமார் 3.1/2 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்த நிறுவனம் கடந்த 2019 நிதியாண்டில் மட்டும் சுமார் 3579 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது. இந்தியாவில் முண்ணனியில் உள்ள ஈ காமர்ஸ் நிறுவனங்களில் பேடிஎம்மும் ஒன்று.

அப்படிப்பட்ட பேடிஎம் வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்களாக இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்தவர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தியுள்ளதாகவும் வேற்று மொழிகளில் தங்களது ஊழியர்கள் பதில் அளிக்க மாட்டார்கள் என்று அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

தற்போது மத்திய அரசு மாநில மொழிகளை புறந்தள்ளிவிட்டு ஒரே நாடு ஒரே மொழி எனும் கொள்கையை முன்னெடுத்து வருகின்ற இந்த வேளையில். பல மாநிலங்களில் மொழிப் பிரச்சினை பூதாகரமாக வெடித்து வருகிறது. 

அண்மையில் கூட மேற்கு வங்க முதல்வர் மற்றும் கர்நாடக முதல்வர் தமிழக எதிர்க்கட்சியினர் மாநில மொழி உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்றும். அப்படி மொழி அழிப்பு நடவடிக்கைகளுக்கு அரசு துணை போனால் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ள வேளையில்.

நாட்டில் உள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்கள் குறிப்பிட்ட சில மொழிகளில் மட்டும் சேவை செய்வதாக காட்டிக் கொள்வதை கண்கூடாக காண முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனமாக பேடிஎம் உள்ளது.

தமிழகத்தில் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களுக்கும் மேல் கொண்டுள்ளது Paytm. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை அழைத்தால் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே பேசுகின்றனர். வேறு மொழிகளில் பேச முற்படும் போது தொடர்பை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதுபற்றி அறிய அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்தோம். ஒருகட்டத்தில் மொழி பற்றிய கேள்விகள் கேட்டபோது தாங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பதிலளிக்க அறிவுருத்தப்பட்டிருப்பதாகவும். வேறு மொழிகளில் பேச அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் பன்முக மொழி பேசும் மாநிலங்கள் இருக்கின்ற இந்த சூழலில். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் மாநில மொழிகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் இப்படி உதாசீனப் படுத்துவது.

மத்திய அரசின் மொழிக்கொள்கைக்கு ஒத்தூதுவது போன்றது ஆகும். தமிழகத்தில் உள்ள வாடிக்கையாளர் இனி‌ இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே Paytm போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் தங்களது குறைகளை தெரிவிக்க முடியும் என்கிற நிலை உருவாகி உள்ளது.

கொசுறு செய்தி. இந்த நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் புகார் அளிக்க என்று தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி இல்லையாம். வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை தான் அழைக்க வேண்டுமாம். ஆனால் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்களாம்.

மணியன் கலியமூர்த்தி