சாலையில் கரை புரண்ட வெள்ளம்! ஒரே மடக்கில் உறிஞ்சிய மர்ம பள்ளம்! வைரல் வீடியோ!

இங்கிலாந்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை நீர் மொத்தமாக திடீர் என தோன்றியப் பள்ளத்தில் முழுவதுமாக வடியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இங்கிலாந்து நாட்டில் நார்த் வெல்ஸ் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்த்து பெய்த மழையில் சாலை எங்கும் வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் எதிர்ப்பாரத விதமாக திடீர் என சாலையில் தோன்றியப் பள்ளம் ஒரு சில நிமிடங்களுக்குள் மொத்தமாக அத்துனை நீரையும் பூமிக்குள்ளாக ஈர்த்து விடுகிறது.

வெள்ள நீர் முற்றிலுமாக வடியும் நேரடிக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் வைரலாகி வருகிறது. மேலும் இந்த காட்சிகள் காண்போரை மிரளச்செய்கிறது. அதாவது மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சாலையை ஆக்கிரமித்து இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்த நிலையில் திடீரென சாலைக்கு அருகே திடீரென மர்ம பள்ளம் ஒன்று ஏற்பட்டது. அந்த பள்ளமானது நீரை அப்படியே ஒரே மடக்கில் உறிஞ்சிவிட்டது. அதன் பின்னர் சாலையில் தண்ணீரே இல்லை. இந்த பள்ளம் எப்படி ஏற்பட்டது தண்ணீர் எங்கே சென்றது என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.