முதலில் முழு நிர்வாணம்! இப்போது அரை நிர்வாணம்! வைரலாகும் பிரபல கிரிக்கெட் வீராங்கனையின் புகைப்படம்!

சமீப காலமாக தங்களை ஏதாவது ஒருவகையில் பிரபலப்படுத்திக் கொள்ள கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதும் பின்னர் ஊடகங்களில் பேட்டி கொடுப்பதும் என நடிகைகள் சுய விளம்பரம் தேடிக் கொள்ளும் சூத்திரம் கிரிக்கெட் வீராங்கனையையும் விட்ட பாடில்லை.


 நம்மூர் கோலிவுட் கதாநாயகிகள் அமலாபால், ரம்யா பாண்டியன் உள்ளிட்டோரின் சூத்திரத்தை அப்படியே பயன்படுத்தி உள்ளார் இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீராங்கனை சாரா டெய்லர். தற்போது கிரிக்கெட் ஏதும் இல்லாத நிலையில் தன்னை மற்றவர்களுக்கு ஞாபகப்படுத்த மேலாடை இல்லாத புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து அணி கிரிக்கெட் வீராங்கனை சாரா டெய்லர். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக வலம் வருபவர் சாரா டெய்லர். கவலை, மனஅழுத்தம் போன்றவைகளில் இருந்து விடுபட்டு வந்த சாரா டெய்லர் பல பெண்களுக்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்னர் முழு நிர்வாணமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

பெண்கள் தங்களை உடல் அளவிலும், மனதளவிலும் எப்படி இருக்க வேண்டும், பிரச்சனைகளில் இருந்து எப்படி மீண்டு வரவேண்டும் என்பதை குறிக்கும் வகையில் வுமென்ஸ் ஹெல்த் இதழுக்கு சாரா டெய்லர் ஒரு புகைப்படம் அளித்துள்ளார். அதாவது நிர்வாணமாக கையில் மட்டும் கிளவுஸ் அணிந்தபடி இருப்பது போல் அந்த இதழுக்கு காட்சி அளித்தள்ளார்.

இந்த போட்டோவை தனது இன்ஸ்ட்டா கிராம் பக்கத்திலும் பதிவு இட்டுள்ளார் சாரா டெய்லர். தற்போது அந்த படம் வைரலாகி வருகிறது. அந்தப் படத்தில் தாம் பேட்டிங் செய்ய காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதை பார்த்த மற்றொரு பெண் கிரிக்கெட் வீராங்கனை அலெக்சாஹார்ட்லி ஆடையில்லாமல் பேட் செய்யப் போகிறீர்களா என கிண்டலாக கமெண்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க ஆபாச வலைதளங்களை தடை செய்யவேண்டும் சினிமா, நாடகங்களில் நடிகைகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு வேண்டும் என எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் இதே காலக் கட்டத்தில்தான் ஒரு துணி கூட அணியாமல் அமலாபால், சாரா டெய்லர் போன்றவர்கள் தங்களை காட்சிப் படுத்தி வருகின்றனர். சமீபத்தில் ரம்யா பாண்டியன் என்ற நடிகையும் கவர்ச்சிகரமான படத்தை போட்டு மற்றவர்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறார்.

பாரம்பரியம், கலாச்சாரம் என பெண்மையை போற்றி வளர்ப்பதோடு மட்டும் அல்லாமல் மகளிர் தினமும் கொண்டாடி சிறப்பிக்கும் இந்த சமுதாயத்தில் கண்டமேனிக்கு கவர்ச்சிப் படங்களை பதிவிடுவதன் மூலம் எதிர்கால ஆண்கள் சந்ததியினருக்கு பெண்கள் மீதான மதிப்பு எப்படி வரும்.