என்ஜினியர் கணவர் விவசாயம் செய்வது பிடிக்கவில்லை! மனைவி எடுத்த பகீர் முடிவு!

விருதுநகர் மாவட்டத்தில் கணவர் பொறியியல் படிப்பு படித்துவிட்டு விவசாயம் செய்ததால் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்தவர் பெரிய மாடசாமி இவர் கட்டிட பொறியாளர் படிப்பு முடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் ஸ்டெல்லா மேரி என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.அவர்களுக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் பெரிய மாடசாமி பொறியியல் படிப்பு படித்து விட்டு அது சம்பந்தமான வேலைக்கு செல்லாமல் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.  

இந்நிலையில் இது பிடிக்காத ஸ்டெல்லா மேரி பலமுறை பொறியியல் சம்பந்தமான வேலைக்கு செல்லும் படி கணவரை வற்புறுத்தியுள்ளதாக தெரிகிறது. மற்றும் அரசு வேலை அல்லது வெளிநாடு சென்று பொறியியல் சம்பந்தமான வேலை செய்யுமாறு பெரிய மாடசாமியை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இதன் காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மிகுந்த ஆத்திரம் அடைந்த ஸ்டெல்லா மேரி தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.