நடிகர் விஜய்க்கு இரண்டாம் தாரமாக வேண்டும்! பிரபல இளம் நடிகையின் விபரீத ஆசை!

நடிகர் விஜயை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்ள ஆசை என்று நடிகை பேசியுள்ளார்.


நடிகை ரைசா வில்சன் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். இவர் ஊட்டியில் பள்ளியில் படித்தபோது மாடலிங் செய்து வந்தார். அதன்பின்னர் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நடித்த அவருக்கு அதற்கு அடுத்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இதன்மூலம் தமிழ் மக்களிடையே பிரபலம் ஆனார். அதன்பிறகு தன்னுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்த ஹரிஷ் கல்யாண் உடன் சேர்ந்து ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். தற்போது அலைஸ் மற்றும் காதலிக்க யாருமில்லை என்ற இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. இதில் உங்களுக்கு யார் யாரை திருமணம் செய்து கொள்ள ஆசை என்ற கேள்வி கேட்கப்பட்டது

அதற்கு பதிலளித்த ரைசா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் இளைய தளபதி விஜய் ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொள்ள ஆசை என்று ஓபனாக பேசினார். இதனை பார்த்த ரசிகர்கள் இருவருமே திருமணம் செய்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்

இவர்களில் நடிகர் விஜய் ஏற்கனவே திருமணம் ஆனவர், அப்படி என்றால் அவருக்கு இரண்டாம் தாரமாக ஆசையா? என்று ரசிகர்கள் கேட்கின்றனர். அதற்கென்ன ஆமாம் என்று தான் ரெய்சாவும் பதில் சொல்லுவார்.