நாமக்கல்லில் இடி விழுந்த இடத்தில் நீர் ஊற்று போல் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சியுடனும், ஆர்வத்துடனும் பார்த்து சென்றனர்.
பயங்கரம் சப்தம்..! காலி நிலத்தில் இருந்து பீய்ச்சி அடித்துக் கொண்டு வெளியேறிய ஊற்று நீர்! அதிர்ச்சியில் உறைந்த திருப்பூர் மக்கள்!
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று மழை பெய்தது. சேந்தமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இங்கு 13.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சேந்தமங்கலம் பேரூராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தபோது ஜங்களாபுரத்தில் சரவணன் என்பவரது விவசாய நிலத்தில் இடி விழுவது போல் ஒரு சத்தம் கேட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு சென்றுபார்த்தபோது இடி விழுந்த நிலத்தில் சிறிய குழி ஏற்பட்டு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் வயல் முழுவதையும் மூழ்கடித்தது. பின்னர் அந்த தண்ணீர்சுற்றுவட்டார பகுதிகளுக்கும் செல்ல அங்குள்ள அரசுப் பள்ளிக்குள் புகுந்தது. இதனால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நிலத்தில் ஊற்று போல் நீர் பெருக்கெடுத்து வருவதால் 2-ஆவது நாளாக இன்றும் நீர் தேங்கி வழிந்தோடியது.
இதை மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். ஆழ்துளை கிணறு 300 அடி போட்டாலும் தண்ணீர் வராத நிலையில் ஒரே ஒருஇடிக்கு பூமியில் இருந்து எப்படி தண்ணீர் வந்தது என அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். ஒருவேளை பூமிக்கு அடியில் கூட்டு குடிநீர் திட்டக் குழாய்கள் ஏதேனும் இருந்து அதில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறலாம் என்றும் சிலர் தெரிவித்தனர்.