சமவெளி வனப்பகுதிகளில் வறட்சி நிலவி வருவதால் மலைப் பகுதிக்கு உணவை தேடி வந்த யானைகள், வாகனங்களை நிறுத்தி யானை செல்ல வழி விட்ட வனத்துறையினர் குட்டி நடுவில் செல்ல இருபுறமும் பாதுகாப்புடன் சாலையை கடந்தன,யானைகள் ...
ஊட்டியில் சாலையை மறித்து நின்ற யானைக் கூட்டம்! ஒற்றை ஆளாக சமாளித்த வனத்துறை வீரன்!
மேட்டுப்பாளையம் சிறுமுகை, கல்லார் வனப்பகுதிகளில் தற்போது வறட்சி நிலவிவருவதாலும் நீலகிரி மாவட்டம் பர்லியார், மரப்பாலம் பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையிலும் வெப்பத்தின் தாக்கம் குறைவாக உள்ளதாலும் யானைகள் மலைப் பகுதிகளுக்கு வரத்தொடங்கியுள்ளன குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே ஒரு குட்டியுடன் இரண்டு காட்டு யானைகள் சாலையை கடக்க முயன்றது யானைகள் தங்கள் குட்டி யானை வாகனத்தில் சிக்கி விடுமோ என்ற அச்சத்தால் சாலைக்கு வருவதும் பயத்துடன் மீண்டும் திருப்பி செல்வதுமாக பலமணிநேரம்
அங்கேயே இருப்பதை கண்ட வாகன ஓட்டுனர்கள் வனத்துறைனருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் இருபுறமும் வாகனங்களை நிறுத்தியதை கண்ட யானைகள் ஆண் யானை முன்னாள் செல்ல குட்டியானை நடுவில் செல்ல தாய் யானை பின்னால் பாதுகாப்புடன் சாலையை கடந்ததும் தங்களுக்கு முன்னதாக குட்டி யானையை சாலையில் இருந்து மறுபுறம் மேலே ஏற்றிய பிறகு இரண்டு யானைகளும் அதன் பின்னால் சென்றது அதன் பிறகு வனத்துறையினர் இரு புறங்களிலும் வரிசையாக நின்ற வாகங்களை விட்டனர் வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் இந்த காட்சியை தங்கல் செல்போனில் படம் பிடித்தனர்...