மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியா..? அலறும் தமிழக அமைச்சர்கள்

ஆரம்பத்தில் தி.மு.க.வினரை மட்டுமே தாக்கிய கொரோனா வைரஸ் இப்போது அ.தி.மு.க.வினரை தொடர்ந்து தாக்கிவருகிறது.


 நேற்று, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவருடன் கடந்த ஒரு வாரத்தில் பழகிய அத்தனை அமைச்சர்களும் அலறிப்போயிருக்கிறார்கள்.

குறிப்பாக அ.தி.மு.க. தலைமையகத்தில் வேலுமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம் ஆகியோருடன் தனியறையில் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

இதுதவிர நேற்று தலைமை செயலகத்தில் முதல்வருடன் நிகழ்வில் கலந்துகொண்டு, கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கினார். அப்போது மேலும் பல அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் தங்கமணி உரையாடிதாக சொல்லப்படுகிறது.

அவர்கள் அத்தனை பேரும், ஆக, இத்தனை நாளும் கொரோனா பார்ட்டியுடனா சுற்றிக்கொண்டு இருந்தோம் என்று அலறிக் கிடக்கிறார்கள். சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்த காரணத்தால், முதல்வர் தனிமைப்படுத்தப் படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில், அடுத்து யாருக்கு என்ற திகிலில் கிடக்கிறது அ.தி.மு.க. கூடாரம்.