மக்கள் உயிருடன் விளையாடும் மின்சாரவாரியம்! கம்பத்திற்குப் பதில் வெறும் குச்சி நட்டு மின் விநியோகம்!

திருவள்ளூர் மாவட்டத்தில், மின்கம்பத்திற்குப் பதிலாகக் குச்சியை நட்டு மின்விநியோகம் நடைபெறுவதாக, அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டி என்ற பகுதியில் ஒரு மாதம் முன்பாக, மின் கம்பம் உடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. புதிய மின் கம்பம் பொருத்தாமல், வெறும் கம்பு ஒன்றை நட்டு அதில், டி வடிவில் குச்சிகளை நட்டு, மின் விநியோகத்தை வழக்கம்போல, மின்வாரியம் வழங்கி வருவதாக, உள்ளூர் மக்கள் புகார் எழுப்பியுள்ளனர். 

இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் மின்சார வாரிய ஊழியர்கள் அலட்சியம் காட்டுவதாகவும், இதனால் உயிர் பலி எதுவும் ஏற்பட்டுவிடுமோ என அச்சப்படுவதாகவும் பொதுமக்கள் பீதியுடன் குறிப்பிடுகின்றனர். சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.