பலர் முன்னிலையில் திடீரென கதறி அழுத பாஜக எம்.பி! அசர வைக்கும் காரணம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்ட தற்போதைய பெண் எம்.பி. கதறி அழுதார்.


நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களை கட்டியுள்ளது. பல்வேறு கட்சிகள் வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. பல்வேறு கட்சிளில் நடப்பு எம்.பி.க்களில் ஒரு சிலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் வேறு சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் பா.ஜ.க.விலும் சிலருக்கு வாய்ப்பளிக்கப்பட்ட போதும் தொகுதியில் செய்த பணிகள், செல்வாக்கு வெற்றி வாய்ப்பு, புதியவர்களுக்கு வாய்ப்பளித்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களைக் கருதி வேறு சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் பாஜக தலைமை அண்மையில் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தற்போதைய எம்.பி. பிரியங்கா ராவத்துக்கு வரும் தேர்தலில் போட்டியிட சீட் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தனக்கு சீட் கிடைக்காததால் எம்.பி பிரியங்கா ராவத் கண்ணீர் விட்டு பொங்கிப் பொங்கி அழுதார்.

அவரது ஆதரவாளர்களும் சீட் மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியதால் சற்று மோதலான சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் கதறி அழுதால் கூட சீட் கிடையாது என்று கட்சி மேலிடம் பிரியங்காவிடம் கூறிவிட்டதாம்.