இடைத்தேர்தல் உளவுத்துறை சர்வே ரிப்போர்ட்! உர்ர்ர் எடப்பாடி! தினகரன் ஆட்களுக்கு வலை!

அவ்வப்போது ஆட்சியாளர்களுக்கு உளவுத் துறையில் இருந்து சர்வே என்ற பெயரில் ஒரு ரிப்போர்ட் அனுப்புவது உளவுத்துறையின் வழக்கம்.


 அந்த வகையில் சமீபத்தில் அனுப்பப்பட்ட ரிப்போர்ட் பார்த்து எடப்பாடி டென்ஷன் ஆகிவிட்டாராம்.

முதலில் அந்த ரிப்போர்ட் என்ன சொன்னது என்று பார்க்கலாம். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 23 தொகுதிகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அதனை எடப்பாடி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இடைத்தேர்தல் விவகாரங்களில் மட்டும் ஆர்வம் காட்டினார்.

அதனால் இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் அரூர், ஆம்பூர், பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், பாப்பிரெட்டிபட்டி,  ஓசூர் ஆகிய 9  தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பரமக்குடி மற்றும் மானாமதுரை தினகரனுக்கு சாதகமாகவும் மற்ற ஏழு தொகுதிகள் தி.மு.க.வுக்கு சாதகமானவை என்றும் குறிப்பிடப்பட்டு இருந்ததாம்.

இந்த விவகாரம் கேள்விப்பட்டு கடுப்பாகிவிட்டாராம் எடப்பாடி. ஆரம்பம் முதலே அ.தி.மு.க.வுக்கு 9 தொகுதிகள் கிடைக்கும் என்று உறுதியாக கூறி வருகிறீர்கள். இந்த எண்ணிக்கையை கூட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. நான் சந்தோஷப்பட வேண்டும் என்பதற்காக இதே எண்ணிக்கையை சொல்லிக்கொண்டே இருப்பீர்களா என்று கேட்டாராம்.

இதைக் கேட்ட உளவுத்துறையினர், தினகரன் வேட்பாளர்களை விலைக்கு வாங்கிவிடலாம் அங்கேயும் நாம் எளிதாக வென்றுவிடலாம் என்று சொன்னார்கள்.  யாருக்கும் தெரியாம காரியத்தை முடிங்க என்று சொல்லியிருக்கிறாராம் எடப்பாடி. 

அதாவது அவர்கள் தினகரன் பக்கம் இருக்கவேண்டும், அதே நேரம் நமக்கு வேலை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறாராம். அதனால் உளவுத் துறை ஜரூராக களம் இறங்கியுள்ளது. தினகரன் டீம் ஜாக்கிரதை