மே 23 இல்லை! மே 24 தான் தேர்தல் முடிவுகள்! சற்று முன் வெளியான புது தகவல்!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வழக்கத்தைவிட நான்கு மணி நேரம் முதல் ஒருநாள் வரை தாமதமாக வெளியாக வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


வழக்கமாக மக்களவைத் தேர்தல் முடிவுகள், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, காலை 11 மணியளவில் தேர்தல் முடிவுகள் எந்த திசையில் செல்கின்றன என்ற வடிவம் கிடைத்து விடும். மாலைக்குள் பெரும்பான்மையான முடிவுகள் வெளியாகி, யார் ஆட்சியை அமைக்கப் போகிறார்கள் என்ற விவரம் தெளிவாகிவிடும்.

ஆனால் இந்த முறை  21 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் ஒவ்வொரு சட்சபைத் தொகுதியிலும் 5 வாக்குப் பதிவு எந்திரங்களின் வி.வி.பேட் எந்திரங்களை பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதனால் தேர்தல் முடிவுகள்  தொடர்பான முழு விவரமும் தெரியவர, வழக்கத்தைவிட, கூடுதலாக நேரம் தேவைப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வி.வி.பேட் சோதனை மூலம் தேர்தலில் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என்றாலும், தேர்தல் முடிவுகள் வெளியாக அதிகபட்சமாக, ஒரு நாள் வரை காலதாமதம் ஆக வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.