தேனியில் ரத்தாகிறது தேர்தல்? மிரட்டும் இயந்திரங்கள்! தவிக்கும் ஓபிஎஸ்!

பன்னீருக்கு இப்போது நேரம் சுத்தமாக சரியில்லை என்றுதான் சொல்லவேண்டும். சும்மா போனால்கூட, கூடவே நாலு வில்லங்கமும் சேர்ந்தே போகிறது. அவருக்கு ஆதரவா யாரும் வாயைக்கூட திறப்பதில்லை.


இந்த நிலையில்தான் 50க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்ட விவகாரம் பெரும் டென்ஷனைக் கிளப்பியிருக்கிறது. ஏன், எதற்காக இந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன என்பதற்கு தேர்தல் அதிகாரி சொல்லும் பதில் எதுவும் நம்பகத்தன்மையுடன் இல்லை என்பதுதான் உண்மை. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கம்மவார் கல்லூரிக்குதான் இந்த இயந்திரங்களைக் கொண்டு செல்ல முயற்சி எடுத்தார்கள். அதற்குள் பலரும் பார்த்துவிட்டதால் முயற்சி முறியடிக்கப்பட்டது என்கிறார்கள். 

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை வெற்றி பெறவைக்கும் மோசடிக்காகவே இந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்று தங்கதமிழ்செல்வன் குற்றம் சாட்டி வருகிறார். இந்தக் குற்றச்சாட்டை கண்டுகொள்ள வேண்டாம் என்று ஓ.பன்னீர் செல்வம் மன்றாடி வருகிறாராம்.

ஏனென்றால், ஏகமாக செலவழித்து மகனுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத்தர ஏற்பாடு செய்திருக்கிறேன். இப்போது பணம் வாங்கியவர்கள் மட்டும் ஓட்டு போட்டால் நிச்சயம் என் மகன் ஜெயித்துவிடுவான். இந்த நிலையில், மறு தேர்தல் நடந்தால் நான் செலவழித்த அத்தனையும் போய்விடும், அதனால் மறு தேர்தல் வேண்டாம் என்று அலறுகிறார் பன்னீர். 

இதுவெல்லாம் ஆளும் கட்சியின் பக்கா பிளான், பன்னீரை பதறவைக்கத்தான் ஆசைப்படுகிறார்கள் என்றும் ஒரு பேச்சு உலா வருகிறது. என்னமோ நடக்குது, ஒண்ணுமே புரியலையேப்பா...