காங்., தலைவர்களுக்கு தேர்தல் நிதி! எடப்பாடி ஆடிய டபுள் கேம்! கடும் கோபத்தில் அமித் ஷா!

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு எடப்பாடி தரப்பிலிருந்து தேர்தல் நிதி சென்றதாக வெளியான தகவலால் அமித்ஷா கடும் கோபத்தில் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைத் தழுவியது. ஆனால் தமிழகத்தில் அதிமுக இடம் பெற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் மத்தியில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. இதனால் தமிழகத்தில் அதிமுக அரசு தொடர எந்த பாதிப்பும் இருக்காது என்று நம்பிக் கொண்டிருந்தால் எடப்பாடி பழனிசாமி.

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே எடப்பாடி பழனிசாமி டெல்லி கொடுக்க ஆரம்பித்தது. அதேசமயம் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் டெல்லியுடன் அதிக நெருக்கம் காட்டினார். தொடர்ந்து 10 நாட்களாக தலைமைச் செயலகம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பணிகளைக் கவனித்து வந்தார் எடப்பாடி.

அதேசமயம் நிகழ்ச்சிகள் மற்றும் செய்தியாளர் சந்திப்பில் வழக்கமான உற்சாகம் இல்லாமல் ஏதோ ஒரு பீதியில் இருப்பவரை போன்றே எடப்பாடி பழனிசாமி காணப்பட்டார். அதேசமயம் ஓ பன்னீர் செல்வம் மிகுந்த உற்சாகத்துடன் தலைமைச் செயலகத்தை வலம் வந்தார். இதற்கான காரணம் எடப்பாடி மீதான டெல்லியில் அதிருப்தி மற்றும் ஓ பன்னீர்செல்வம் மீதான டெல்லியில் பாசம் என்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்கிற ரீதியில் சில ஊடகங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. இதனால் மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பிருப்பதாக எடப்பாடி பழனிசாமி இடம் சிலர் கூறியுள்ளனர். மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தன் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க எடப்பாடி சில முன் தயாரிப்புகளில் ஈடு பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு தேர்தல் நிதி எடப்பாடி தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டதாக பேசிக் கொள்கிறார்கள். இந்தத் தகவலை பாஜக தரப்பு சிறிது தாமதமாகவே மோப்பம் பிடித்துள்ளது. அப்போது முதலே எடப்பாடி மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருப்பதாகவும் டபுள் கேம் ஆடிய எடப்பாடி மற்றும் அவருக்கு நெருக்கமான அமைச்சர்களை டெல்லி கைவிட்டு விட்டதாகவும் கூறுகிறார்கள்.

இதனால்தான் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாகவே முகத்தில் களை இல்லாமல் சுற்றி வருவதாகவும் சொல்கிறார்கள்.