திமுக கொடுத்த ரூ.25 கோடி! மனைவி, பிள்ளைகள் பெயரில் சொத்து வாங்கிய தலைவர்கள் யார்? மாரிதாஸ் வெளியிட்ட திடுக் தகவல்!

தேர்தல் செலவினமாக கொடுக்கப்பட்ட ரூ.25 கோடியை கம்யூனிஸ்ட் தலைவர்கள் யார் யார் பங்கு போட்டுக்கொண்டார்கள் என்ற அதிர்ச்சி தகவலை சமூக செயற்பாட்டாளர் மாரிதாஸ் வெளியிட்டுள்ளார்.


சமூக செயற்பாட்டாளர் மாரிதாஸ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் 4 தொகுதிகளில் போட்யிட்டது. தேர்தல் நிதியாக அவர்களுக்கு ரூ.25 கோடி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாகவே தேர்தல் செலவினம் என்றால் கணக்கில் வைத்திருப்பது ஒன்று, கணக்கில் காட்டாதது மற்றொன்று என குறிப்பிட்ட அவர் அரசியல் கட்சிகளிலேயே அதிகம் நியாயம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த பணத்தை யார் பங்கு போட்டுக் கொண்டார்கள் என கேட்கவேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார். 

தேர்தல் சமயங்களில் கம்யூனிஸ்ட் பத்திரிகையான மாத்ரூபூமிக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் 2 கோடி ரூபாய் வரை நன்கொடை வழங்குவது வழக்கம். தேர்தல் சமயங்களில் பலரிடம் நன்கொடை வசூலிப்பதை வழக்கமா வைத்திருப்பதாக குறிப்பிடும் மாரிதாஸ், பின்னர் அவர்களை எதிர்த்தே போராட்டம் நடத்துவது கம்யூனிஸ்ட் கட்சியன் வாடிக்கை என குறிப்பிட்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ளவர்கள் யாரும் நியாயவாதிகள் கிடையாது என்றும் வாங்கிய பணத்தை யார் பிரித்துக் கொண்டார்கள் என தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் திமுக கொடுத்த செலவு கணக்கு அறிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடி ரூபாய், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 கோடி ரூபாய் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் பணமே வாங்கவில்லை என மறுத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பின்னர் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் சில தலைவர்கள் வாங்கிய பணத்தில் தங்கள் குடும்பத்தார் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக மாரிதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.