ஓட்டு போட்டா பிரியாணி விரையில் அதிரடி டிஸ்கவுண்ட்! பிரபல ஹோட்டல்களின் அசர வைக்கும் அறிவிப்பு!

வாக்களித்துவிட்டு வருபவர்களுக்கு தள்ளுபடி விலையில் உணவு வழங்க தமிழ்நாடு ஹோட்டல் சங்கம் திட்டமிட்டுள்ளது.


17 வது மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் ஒருபுறமிருக்க,  100 சதவீத வாக்குகள் பதிவாகி வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன ‌.

பல்வேறு பிரபலங்களும் இதனை வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி வாக்களித்துவிட்டு வருபவர்களுக்கு 10% தள்ளுபடி விலையில் உணவு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்களிக்கும் போது கைவிரலில் இடப்படும் மையை காட்டியோ அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காட்டியோ வாக்காளர்கள் ஓட்டல்களில் தள்ளுபடி உணவை ருசிக்கலாம்.

இந்தத் தள்ளுபடி ஆனது சங்கீதா, சரவணபவன் ஆகிய முன்னணி உணவகங்களுக்கும் பொருந்தும். ஆனால் ஒரே ஒரு குறை என்னவென்றால் மாலை 6 மணிக்கு பிறகுதான் இந்த தள்ளுபடியை பெற முடியும். ஏப்ரல் 18ஆம் தேதி இரவு ஓட்டல்கள் கதிகலங்க போவது உறுதி.