வரிசையில் நிற்காமல் விஐபி கெத்தில் சென்ற அஜித்! தட்டிக் கேட்ட இளம் பெண்! பிறகு என்ன ஆனது?

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.


 பொதுவாக தமிழகத்தின் முன்னணி செலிபிரிட்டிகள், அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் எப்போதும் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களிப்பது. வழக்கம் சென்ற தேர்தலில் கூட நடிகர் அஜித்குமார் ,விஜய் ஆகியோர் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்ததை நாம் பார்த்தோம்.

 இந்நிலையில் இந்த தேர்தலில் விஜய் ,ரஜினிகாந்த் ஆகியோர் வெகு சீக்கிரம் காலையிலேயே வந்து அவர்களுக்கான தொகுதியில் வாக்கு பதிவு செய்தனர். ஆனால் தல அஜித் குமார் வாக்குப் பதிவுக்கு வந்த போது அவரால் கூட்டத்தில் நிற்க முடியவில்லை. கூட்டம் அதிகமானதால் போலீஸ் அவரை அழைத்துச் சென்று வாக்கு பதிவு செய்ய வைத்து விட்டு உடனடியாக கூட்டத்திலிருந்து விலக்கி அஜித்தை அழைத்து வந்தனர்.

 அஜித்தும் சாதாரண மனிதர் தானே? அவர் எப்படி கூட்டத்தை தாண்டி வரிசையில் நிற்காமல் உள்ளே சென்று வாக்கு அளிக்கலாம்? என்று அங்கிருந்தவர்கள் கொந்தளித்தனர். அதனைத் தாண்டி சிலர் அஜித்தின் தலையில் பின்னால் அடித்துள்ளனர். ஒரு பெண்மணி குறிப்பாக அஜித்தை கண்டபடி வாய்க்கு வந்தபடி திட்டுகிறார் .இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.