இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டது.
குடிமகன்களுக்கு ஒரு எச்சரிக்கை! மூன்றாவது குவார்ட்டருக்கு ஜெயில்! தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

அதனால் ஒரு தனி நபர் இரண்டு குவார்ட்டர் பாட்டிலுக்கு மேல் வாங்கினால் நீங்கள் தேர்தல் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட வாய்ப்பு உண்டு. ஏனென்றால் தனி நபர் பயன்பாடு என்பது இரண்டு குவார்ட்டரைத் தாண்டாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு போட்டுள்ளது.
அதனால் இரண்டு குவார்ட்டர் பாட்டிலுக்கு மேல் வாங்கி, குடிக்கவோ அல்லது வீட்டில் ஸ்டாக் வைக்கவோ விரும்பினால், உங்கள் மீது தேர்தல் விதிமுறை வீறல் வழக்கு தொடரப்பட்டு ஜெயில் தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
குடிமகன்களுக்கு மட்டுமின்றி டாஸ்மாக் ஊழியர்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்த ஒரு தனி நபருக்கும் 2 பாட்டில்களுக்கும் மேல் விற்பனை செய்தால், பணியாளர் மீது சட்டரீதியான நடவடிகை எடுக்கப்படும். இதனை டாஸ்மாக் நிர்வாகம் ஆணையின் மூலம் எச்சரித்து உள்ளது.
ஆக, தேர்தல் முடியும் வரை குடிமகன்கள் உஷாரா இருந்துக்கோங்க. இரண்டு குவாட்டருக்கு மேல் வாங்கிச் சென்றால் உஷாராக இருக்க வேண்டும்.